விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான கவின் அப்படியே படங்களிலும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் அடித்த அட்ராசிட்டியால் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இதனால் லிஃப்ட் படத்தில் ஹீரோவாகும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தப் படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய டாடா திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இப்படத்தை் தொடர்ந்து இவர் யாருடைய படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. அதன்படி, டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் புதிய படத்தில் கவின் கமிட்டாகியுள்ளார்.
இதுதவிர மேலும் சில இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ளாராம் கவின். இந்நிலையில், கவின் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். சீரியல்களில் நடித்தபோதே லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கவின், இப்போது கோடிகளில் கமிட்டாகி வருகிறாராம். அதன்படி, லிஃப்ட், டாடா படங்களின் வெற்றிக்குப் பின்னர் ஒரு படத்துக்காக 1.5 முதல் 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
அதனடிப்படையில் கவினின் சொத்து மதிப்பு சுமார் 5 முதல் 7 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், சென்னையில் ஒரு பிளாட் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர சொந்தமாக ஒரு கார் வைத்துள்ளார் கவின். டாடா படத்தின் வெற்றிக்குப் பின்னர் கவினின் மார்க்கெட் வேல்யூ கூடியுள்ளதால், இனிவரும் நாட்களில் அவரின் சம்பளம், சொத்து மதிப்பு ஆகியவை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.