fbpx

’ஜெயிலர்’ படத்திற்காக விநாயகன் வாங்கிய உண்மையான சம்பளம் எவ்வளவு தெரியுமா..? அவரே சொன்ன தகவல்..!!

ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த வில்லன் விநாயகனுக்கு சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

ரூ.600 கோடி வசூலைக் கடந்து ஜெயிலர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், அனிருத் ஆகியோருக்கு கலாநிதி மாறன் கார் பரிசளித்தார். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை காசோலையாகவும் வழங்கப்பட்டது. ஆனால், இந்த படத்தில் வில்லன் நடிப்பு அமோக வரவேற்பை பெற்றது. இதனால், விநாயகனுக்கு பரிசு ஏதும் இல்லையா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பினர்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் விநாயகன் பங்கேற்றார். அப்போது ஜெயிலர் படத்தில் ரூ.35 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விநாயகன், ‘ரஜினியுடன் நடித்தது என் பாக்கியம்தான். ஜெயிலர் படத்தின் வெற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நீங்கள் சொன்ன தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாகவே தயாரிப்பாளர் எனக்கு சம்பளம் அளித்ததாக தெரிவித்தார்.

Chella

Next Post

விஜய் ஆண்டனியின் மகள் மறைவு..!! லியோ படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Tue Sep 19 , 2023
நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மறைவால் லியோ பட போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 12ஆம் வகுப்பு படிக்கும் அவர், கடந்த சில நாட்களாக கடுமையான மன உளைச்சளால் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இச்செய்தி தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் நேரில் சென்று விஜய் […]

You May Like