யுவன்சங்கர் ராஜாவின் முதல் மற்றும் இரண்டாம் மனைவியுடன் திருமணத்தின்போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தமிழ் சினிமா உலகின் இசையமைப்பாளர்களில் ஒரு சிலர் மட்டுமே உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர். அந்த வகையில் இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா சினிமா உலகில் பல்வேறு சிறந்த படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். மேலும், அதிகப்படியான ரசிகர்களை தனது இசையின் மூலம் கட்டிப்போட்டு உள்ளார் யுவன். இவர் முதலில் அரவிந்தன் என்னும் திரைப்படத்திற்கு இசையமைத்து அறிமுகமானார். அதன் பின் இவர் பல்வேறு முன்னணி நடிகர்களான சூர்யா, அஜித், தனுஷ், விஷால் போன்ற நடிகர்களின் படங்களுக்கு சிறப்பாக பாடல் அமைத்தும் தீம் மியூசிக் போட்டும் அசத்தியவர்.
இப்பொழுதும் தொடர்ந்து தனது திறமையை வெளிக்காட்டி சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார். சினிமா உலகில் வெற்றியை ருசித்து ஓடிக்கொண்டிருக்கும் இவர், நிஜ வாழ்க்கையில் சில சருக்கல்களை கண்டுள்ளார். இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா நிஜ வாழ்க்கையில் இரண்டு மனைவிகளை திருமணம் செய்து சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்துவிட்டு மூன்றாவதாக ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா முதல் இரண்டு மனைவிகளை திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார். முதல் மனைவியின் பெயர் சுஜயா சந்திரன் இரண்டாவது மனைவியின் பெயர் ஷில்பா மோகன்.
இந்நிலையில், யுவன்சங்கர் ராஜா இவர்கள் இருவரையும் திருமணம் செய்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ரசிகர்களும் இந்த புகைப்படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.