வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வரும் விஜய் அவரது கையில் ஒரு குழந்தையை வைத்தவாறு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. யார் அந்த குழந்தை என சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது.
சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்படப்பிடிப்பு நடந்து வருகின்றது. வாரிசு திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தமன் இசையமைத்து தில் ராஜு தயாரிக்கும் இந்த படம் ஒரு எமோஷனலான குடும்பப்பாங்குடைய திரைப்படம் என கூறப்படுகின்றது. இதில் விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இதனிடையே வாரிசு படம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் நிலையில் இதன் முதல் சிங்கிள் இந்த வாரம் வெளியாகும் எனவும் . அந்த பாடல் விஜய் பாடியதாக இருக்கும் என கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளார்கள். விரைவில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
தற்போது சமூக வலைத்தலங்களில் ட்ரெண்டாகி வரும் இந்தக் குழந்தை வேறு யாரும் இல்லை. தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழந்தைதான். இந்த படத்தை ஷேர் செய்து வைரலாகி வருகின்றது.