fbpx

தனது தந்தையுடன் போலீஸ் உடையில் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா..? பிரபல தமிழ் நடிகராக இது..?

தமிழ்நாடு போலீஸ் ADGP ரமேஷ் குடவ்லா-விற்கு மகனாக பிறந்தவர் தான் விஷ்ணு விஷால். அவர் எம்.பி.ஏ முடித்தப் பிறகு, TNCA லீக் ஆட்டங்களில் விளையாடி, ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தார். அப்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இருப்பினும் அவர் படுக்கையிலேயே இருந்த காலத்தில், படங்களை பார்க்கத் தொடங்கினார். பிறகு, அவருக்கு நடிக்க ஆர்வம் ஏற்படத் தொடங்கியது.

அவரது தந்தை, மாமா பல சிறிய படங்களில் ஒரு நடிகராக இருந்ததாலும், அவருக்கு படத்துறையில் ஆர்வம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகர் விஷ்ணு தற்போது ஜீவா, இடம் பொருள் ஏவல், இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே திரை நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தனது தந்தையுடன் போலீஸ் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

"ஒரே நாடு ஒரே தேர்தல்" எந்த நேரத்திலும் தேர்தல் நடத்த தயார்…! தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

Thu Sep 7 , 2023
“ஒரே நாடு ஒரே தேர்தல்” நாடு முழுவதும் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்வதற்கான முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு நபர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது, “அரசியலமைப்பு விதிகள் மற்றும் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின்படி, […]

You May Like