fbpx

நடிக்க வரும்போது மட்டும் எங்களது தயவு தேவைப்படுகிறதா..? ஹன்சிகாவை நேரடியாகவே வெளுத்து வாங்கிய பயில்வான்..!!

சினிமா நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயத்தைப் பற்றி வெளிப்படையாக பேசியதன் மூலம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவரை அழைத்து ஏதாவது ஒரு கான்ட்ரோவசியை உருவாக்கினால் தான் படம் ஹிட் ஆகும் என சமீப காலமாகவே புது புது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இவரை வரவழைத்து விடுவார்கள். இவரும் பிரபலங்களிடம் ஏடாகூடமாய் ஏதாவது ஒரு கேள்வி கேட்டு சர்ச்சையை கிளப்பி விடுவார்.

அந்த வகையில், நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணத்திற்கு பிறகு ஆதியுடன் பாட்னர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் ஹன்சிகா தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்ததாக பேசினார். அதன் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பயில்வான் ரங்கநாதன் ஹன்சிகாவை வெளுத்து வாங்கி உள்ளார்.

ஹன்சிகாவிற்கு மார்க்கெட் குறையவும் திடீரென்று பிரபல தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை ஜெய்ப்பூர் அரண்மனையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் திருமணத்திற்கு எந்த தமிழ் சினிமா பத்திரிகையாளர்களையும் மதிக்கவில்லை, யாருக்கும் இன்விடேஷன் கூட கொடுக்கவில்லை. இப்போது மறுபடியும் நடிக்க வரும்போது மட்டும் எங்களது தயவு தேவைப்படுகிறதா..? உங்களுடைய கல்யாணத்திற்கு வெளிச்சம் போட வேண்டாம், ஆனால் நீங்கள் சினிமாவிற்கு நடிக்க வரும்போது வெளிச்சம் போட வேண்டுமா..? என்றும் பயில்வான் ரங்கநாதன் ஹன்சிகாவின் முகத்திற்கு நேராகவே கிழித்துவிட்டார்.

இந்த அளவிற்கு துணிச்சலாய் என்னை தவிர யார் தைரியமாக கேட்க முடியும் என்று காலரை தூக்கிக் கொண்டார். இந்த கேள்வியை இப்போது நான் கேட்கவில்லை, நடிகை ரேவதி திருமணம் செய்து கொண்டு 3 வருடம் சினிமா விட்டு ஒதுங்கி இருந்து, அதன் பின் நடிக்க வரும்போது, இப்போது ஹன்சிகாவிடம் கேட்டது போலவே அப்போது ரேவதியையும் கேட்டேன். உடனே அவர் பிரஸ் மீட் முடிந்தது என டென்ஷன் ஆகி கிளம்பிவிட்டார். ஆனால், ஹன்சிகாவிற்கு தமிழ் தெரியாததால் திரு திருன்னு முழித்துக் கொண்டே பதில் பேசாமல் நின்றார் என்று பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க வேண்டும் - கோரிக்கை

Wed Jul 5 , 2023
தமிழ்நாடு சினிமா திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் நீண்ட நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் கூடுதலாகவே வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதில், “கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி தமிழக அரசாணை மூலம் எங்களுக்கு கட்டண விகிதம் நிர்ணயித்து ஆணையிட்டது. 6 ஆண்டுகள் கடந்துவிட்டதாலும், நடைமுறை செலவுகள் அதிகரித்து விட்டதாலும் திரையரங்குகள் நடத்த […]

You May Like