அறிமுகமான முதல் படத்திலேயே மக்களின் வரவேற்பை பெற்ற நடிகர்களில் கார்த்தியும் ஒருவர்.. 2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.. விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்றை பெற்ற இப்படம் பல்வேறு விருதுகளையும் வென்றது.. பிரியா மணி கதாநாயகியாக நடித்த இப்படத்தில் பொன்வண்ணன், சரவணன், கஞ்சா கருப்பு, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்..
பருத்தி வீரன் படத்தில் குட்டி சாக்கு என்ற கதாப்பாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.. இந்த கதாப்பாத்திரத்தில் நடித்தவர் விமல் ராஜ்.. ஆனால் பருத்தி வீரன் படத்திற்கு பிறகு விமல் ராஜ் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை..
இந்நிலையில் விமல்ராஜ் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.. அந்த பேட்டியில் “ எனக்கு பருத்தி வீரன் பட வாய்ப்பு கிடைக்கும் போது நான் 6-ம் வகுப்பு கொண்டிருந்தேன்.. அந்த படத்திற்கு முன் எந்த படத்திலும் நடித்தது இல்லை.. எனவே முதல் படத்தில் நடித்த போது கொஞ்சம் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது.. பின்னர் பழகிவிட்டது.. பருத்திவீரன் படத்திற்கான நான் ஓராண்டு பள்ளிக்கு செல்லவில்லை..
பருத்தி வீரன் படத்தில் நடித்து முடித்து 4 ஆண்டுகள் கழித்து என் கண்ணை வைத்து என்னை அடையாளம் தெரிந்து கொண்டனர்.. தற்போது எனக்கு திருமணம் ஆகிவிட்டது.. தற்போது சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன்.. குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேறு வழி இல்லாமல் தற்போது சுமை தூக்கும் வேலை செய்து வருகிறேன்.. இந்த வேலை எனக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும்.. ஆனாலும் பழகிவிட்டது..” என்று தெரிவித்தார்..