தெலுங்கில் பிரபல நடிகரான விஷ்வக் சென் உடன் இனி இணைந்து பணியாற்ற தயாராக இல்லை என்று நடிகர் அர்ஜுன் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் அர்ஜுன். தற்போதும் வில்லனாக தமிழ் திரைப்படங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பது மட்டும் இன்றி திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பு போன்ற திறமைகளையும் கொண்டவர். தன் மகள் ஐஸ்வர்யாவை வைத்து தெலுங்கில் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இதற்காக தானே முன்வந்து ஒரு படத்தை இயக்குகின்றார். இதில் கதாநாயகராக விஷ்வக் சென் என்பவரை புக் செய்துள்ளார்.

இந்நிலையில் அவர் பரபரப்பான புகார் ஒன்றை கூறியுள்ளார். அதில் ’’ என் மகள் ஐஸ்வர்யாவை வைத்து தெலுங்கில் ஒரு படம் இயக்க உள்ளேன. அதில் நடிக்க விஷ்வக் சென் என்பவருடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அவரும் நடிக்க ஒப்புக் கொண்டார். அவர் கேட்ட பணத்தை வழங்கவும் தயாராக இருந்தோம். ஷூட்டிங் தொடங்கிய நேரத்தில் மூத்த நடிகர்கள் எல்லாரும் வந்துவிட்டனர். இவர் மட்டும் வரவில்லை. அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் சரியான பதில் கிடைக்கவில்லை.

இதுபோல யாருக்காகவும் நான் இப்படி போன் செய்தது கிடையாது. அவருக்கு பதில் வேறொரு நடிகரை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளோம். இந்த நடிகர் சரியில்லை. தெலுங்கில் பிரபல நடிகர்கள் கூட அல்லு அர்ஜுன் போன்றவர்கள் கூட சரியான நேரத்திற்கு வருவார்கள். 100 கோடி கொடுத்தாலும் இவருடன் நான் பணியாற்ற மாட்டேன். என தெரிவித்துள்ளார்.
இதனிடையே அர்ஜுன் ஷார்ஜா இத்திரைப்படத்திற்கு அடுத்த கதாநாயகனாக யாரை அறிமுகப்படுத்தப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழில் பட்டத்துயானை என்ற படத்தில் நடித்துள்ளார். 2013க்கு பின்னர் 2018ம் ஆண்டு சொல்லிவிடவா என்ற தமிழ்படத்தில் நடித்துள்ளார். கன்னட மொழியில் பிரேமா பிரஹா என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் சைமா விருதுக்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது.