பொதுவாகவே சினிமாவில் நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதும், திருமணம் செய்து விவாகரத்து பெறுவதும் சகஜமான ஒரு விஷயம்தான். அதுவே 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வரும் பிரபலங்களும் உள்ளனர்.
அவ்வாறான நடிகைகளில் ஒருவர் தான் சித்ரா. இவர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘புது புது அர்த்தங்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மேலும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமான படையப்பா படத்தில் அவருக்கு தங்கையாக செளந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
கேரளத்து பைங்கிளியான சித்ரா தற்போது தன்னுடைய 50 வயதை எட்டி உள்ளார். அதாவது இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த ஒருவரை காதலித்து வந்த நிலையில், அந்த காதல் கை கூடாததால் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். அத்தோடு அவரின் தந்தையின் பிரிவும் அவரை வாட்டி வதைக்க, திருமணம் செய்யாமல் இன்று வரை தனியாகவே வாழ்ந்து வருகிறார்.
இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூட, ”நான் தான் திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். இதற்கு முக்கிய காரணம் என் வாழ்க்கையில் என்னுடைய மிக முக்கிய நபரான என்னுடைய தந்தையை நான் இழந்து விட்டேன். அதன் பிறகு நான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் திருமணம் பற்றி சிந்திக்கவும் கிடையாது. ஏனெனில், நம்முடைய வாழ்க்கையில் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதனால் மற்றொருவர் கஷ்டப்படக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.