fbpx

’குடிக்கிற… குடிச்சிட்டு தப்பா பேசுற’..!! ’உன்ன எப்படி சும்மா விட்டாங்க’..!! திவ்யாவை வெளுத்து வாங்கிய ஷகீலா..!!

சமீப காலமாகவே சோசியல் மீடியாவை தவறான முறையில் பல பேர் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், யூடியூப்பில் பிரபலமாகி அதை தவறாக பயன்படுத்தி வந்த பெண் ஒருவர் தான் திவ்யா கள்ளச்சி. தஞ்சை மாவட்டம் மருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் டிக்டாக் செயலி இந்தியாவில் இருந்தபோது அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். பின்னர், டிக்டாக் தடை செய்யப்பட்ட உடன் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

அந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளை கிளப்பியது. பலமுறை கைது செய்யப்பட்டு விடுதலையானார். இருந்தாலும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை ஷகீலா திவ்யாவை பேட்டியெடுத்துள்ளார். அதில் திவ்யா பல்வேறு விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது, ’நான் கன்டென்டக்காகவும், பணத்திற்காகவும் தான் இப்படியெல்லாம் செய்திட்டு இருக்கிறேன். அண்மையில் எனக்கு கல்யாணம் நடந்த மாதிரி வீடியோ போட்டேன். அதெல்லாம் பொய் எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல என்று தெரிவித்தார்.

மேலும், படங்களில் கல்யாணம் பண்ற மாதிரி தான்.. பேமஸ் ஆகிறதுக்காக இப்பிடிப் பண்ணினோம். அதில எங்களுக்கு நிறையப் பணம் கிடைச்சிச்சு, என்னோட சேர்ந்து நடிக்கிறவங்க எல்லாம் பேமஸ் ஆகிறாங்க என்பதால் தான் இப்படிப் பண்ணிட்டு இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். அப்போது கோபமடைந்த ஷகீலா, ”சினிமால நீ கை காட்டிறவங்க எல்லாம் பேமஸ் ஆகிடுவாங்களா? மனசில என்ன நினைச்சிட்டு இருக்க.

குடிக்கிற.. குடிச்சிட்டு திருநங்கைகளை தப்பா பேசுற.. எப்படி அவங்க உன்னை சும்மா விட்டாங்க, உன்னை கடவுள் படைக்கும் போது குழம்பிப் போய் இருந்தாரு போல.. காசுக்காக ஏமாத்துவியா. யாரெல்லாம் ஏமா்திறாங்களோ அவங்களுக்கு சரியான தண்டனை கிடைக்கும் அது பற்றி நீ பேசாத என திவ்யாவைத் திட்டியிருக்கிறார்.

Chella

Next Post

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் எப்போது..? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்..!!

Tue Jul 11 , 2023
தமிழ்நாடு அரசின் சார்பாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொரோனா காரணமாக லேப்டாப் உற்பத்திக்கு தேவையான உதிரி பாகங்கள் உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு ஏற்கனவே பங்கேற்ற லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள், […]

You May Like