fbpx

’தாராள பிரபு ’ ஹீரோவுக்கு டும்.. டும்..!!

’தாராள பிரபு ’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஹரீஷ் கல்யாண் நாளை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண் , திருமண அறிவிப்புக்கு பின்னர் வாழ்த்தி உடன் நிற்கும் அனைவருக்கும் நன்றி , உங்கள் அன்பு இன்னும் தேவை என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்கள் ’ திருமணத்திற்கு பின்னரும் நீங்கள் ரொமாண்டிக் படங்களில் நடிப்பீர்களா? எனும் கேள்விக்கு பதில்அளித்த ஹரிஷ் , திருமணத்திற்கு முன் பின் என நான் பார்க்கவில்லை ,சிறந்த கதைகளை கொடுக்க வேண்டும் என்றார்.

சென்னை திருவேற்காட்டில் ஐ.பி.என். பேலஸ் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் திருமணம் நடைபெறும் என்று தெரிவித்தார். இன்று முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் , திருமணத்திற்கு அனைவயைும் அழைத்ததோடு ஆசீர்வாதம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் பியார் பிமோ காதல் , இசபேட் ராஜாவும் இதய ராணியும், ஓ மணப்பெண்ணே போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். எனினும் அவர் நடித்த தாராள பிரபு திரைப்படத்தால் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

’வாடகைத் தாய் ’ முறையை கதையாக கொண்ட படம்தான் ’யசோதா’… எப்போ ரிலீஸ் ஆகுதுன்னு தெரியுமா?

Thu Oct 27 , 2022
சமந்தா நடித்து அடுத்து வெளிவரவுள்ள ’யசோதா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ’வாடகைத் தாய் ’ முறையை கதையாக கொண்டது எனதெரியவந்துள்ளது. சமந்தா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் ’யசோதா’ திரைப்படம் உருவாகி உள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 11ம் தேதி வெளிவருகின்றது. தமிழ் , தெலுங்கு , மலையாளம்  உள்பட 5 மொழிகளில் திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கான ட்ரெய்லர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி […]

You May Like