fbpx

நயன்தாரா குடும்பத்தில் வெடித்த பூகம்பம்..!! ’ஏகே 62’ படத்திலிருந்து விக்கியை நீக்க இவரும் காரணமா..?

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி திரை உலகில் அடிக்கும் கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. கடந்த சில வாரங்களாகவே இந்த ஜோடியை பற்றிய பேச்சு தான் ஓடிக் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் இருவரும், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோலாகலமாக தங்கள் திருமணத்தை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் வெளியிடும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் சோஷியல் மீடியாவையே கலக்கி வந்தது. புதுமண தம்பதிகளாக வாழ்க்கையை என்ஜாய் செய்து வந்த இவர்கள் இருவரும், சில மாதங்களுக்கு பிறகு தங்கள் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். ஆனால், அங்கு தான் வினையே ஆரம்பித்தது.

ஏற்கனவே திருமணம், குழந்தைகள் என்று சர்ச்சைகளை சந்தித்து வந்த இந்த ஜோடி, அடுத்ததாக பெரும் பிரச்சனையை சந்தித்தது. அதாவது, விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இது பரபரப்பை கிளப்பிய நிலையில், நயன்தாராவின் அடுத்தடுத்த படங்களும் தோல்வியை சந்தித்தது. மேலும், விக்னேஷ் சிவனின் இந்த நிலைக்கு நயன்தாரா தான் காரணம் என்ற ரீதியிலும் பேச்சுக்கள் எழுந்தது. ஒரு விதத்தில் அதுதான் உண்மையும் கூட. இருவரும் இயக்கம், நடிப்பு என்று வேறு வேறு பாதையில் பயணித்தாலும் அதில் இருவரின் தலையீடும் அதிகமாக இருந்திருக்கிறது. அதாவது நயன்தாரா படங்களில் விக்னேஷ் சிவனின் குறுக்கீடு சில குழப்பத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று கணவரின் வேலையிலும் நயன்தாரா தலையிட்டு வந்துள்ளார்.

இப்படி ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுக்கிறேன் என்ற பெயரில் தங்களுக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில் இப்போது அவர்களின் நிலைமை உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட என்ற அளவில் இருக்கிறது. இதுதான் இப்போது அவர்களின் குடும்பத்துக்குள் பூகம்பமாக வெடித்துள்ளது. இதனால் நயன்தாரா இப்போது ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார். இனிமேல் எந்த அசிங்கமும் வேண்டாம் என்று யோசித்த நயன்தாரா, சினிமாவில் இருந்து விலகும் யோசனையில் இருக்கிறார். கைவசம் இருக்கும் படங்களை முடித்து கொடுத்துவிட்டு முழு நேர குடும்ப தலைவியாகிவிடலாம் என்று அவர் முடிவெடுத்துள்ளார். இது அவருடைய ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

Chella

Next Post

தமிழக பொதுப்பணித்துறையில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க சூப்பர் வாய்ப்பு..!!

Sat Feb 25 , 2023
தமிழ்நாடு அரசில் துறை வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகம் மற்றும் நிரந்தரம் என 2 வகைககளில் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியிட்டப்பட்டுள்ளது. காலியிடங்கள்: தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் Graduate Apprentice, Diplomo Apprentice ஆகிய 2 பிரிவுகளில் மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் Graduate Apprentice பணிக்கு 335 பேரும் (Civil […]

You May Like