திரையுலகில் ஒரு சில நடிகைகளே தொடர்ந்து பல ஆண்டுகள் ஹீரோயினாக நிலைத்து நிற்கின்றனர்.. பெரும்பாலான நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு, இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுகின்றனர்.. அந்த வகையில், ஒரு சில படங்களிலேயே ஃபீல்ட் அவுட் ஆன நடிகைகளில் சிந்து மேனனும் ஒருவர்.. தமிழ் மற்றும் மலையாளத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை சிந்து மேனன்.. குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமான இவர் தமிழில் சமுத்திரம், கடல் பூக்கள், யூத், ஈரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்..

ஆனால் சிந்து மேனனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.. பின்னர் 2010-ம் ஆண்டு டொமினிக் பிரபு என்ற லண்டனை சேர்ந்த தொழிதிபரை திருமணம் செய்து கொண்டார்.. பின்னர் சிந்து மேனனும் லண்டனிலேயே செட்டில் ஆகிவிட்டார்..
திருமணத்திற்கு பிறகு முழுக்க முழுக்க குடும்பத்தை கவனித்து வரும் அவர்,
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.. மேலும் சிந்து அடிக்கடி தனது ஃபேமலி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.. சிந்துவுக்கு மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர்.. அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டதாக கருத்து பதிவிட்டுள்ளனர்..