fbpx

இந்த பிரபலத்திற்கு 100 கோடி சொத்து மதிப்பா?  13 வருடங்களிலேயே அதிக சொத்தை வாங்கிய நடிகையா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தாவின் சொத்து மதிப்பின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

Samantha Ruth Prabhu: சென்னையில் பிறந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிப்பை முடித்த இவர் 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமான இவர் இன்று மக்கள் மத்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்திய அளவில் மட்டுமே வலம் வந்த இவர், தி பேமிலி மேன் 2 வெப் தொடரின் மூலம் பாலிவுட் பக்கம் கவனம் பெற்றார். இதை தொடர்ந்து சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து உலகளவில் கவனம் பெற்றார்.

தெலுங்கு பட நடிகரான நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதனை தொடர்ந்து, அரிய வகை நோயினால் சமந்தா பாதிக்கப்பட்டார். பல சிக்கல்களை சமாளித்து வரும் சமந்தாவின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

37 வயதை கடந்துள்ள நடிகை சமந்தா, இதுவரை சேர்த்து வைத்துள்ள சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், இவருக்கு மும்பை மற்றும் ஹைதராபாத்தில் சொந்தமாக சொகுசு வீடுகள் உள்ளன. இதில், ஹைதராபாத்தில் உள்ள வீட்டின் மதிப்பு மட்டுமே 7 கோடி ரூபாயாகும். மேலும் சாஹி எனும் ஆடை நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார். இவரிடம் விலையுயர்ந்த சொகுசு கார்களும் உள்ளது.

2010ல் தனது திரை வாழ்க்கையை துவங்கிய சமந்தா, பல விமர்சனங்கள், விவாகரத்து, மயோசிட்டிஸ் பாதிப்பு என பல இன்னல்களை தாண்டி இன்று தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் என்றால் மிகையல்ல.

MS Dhoni | ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக எம்.எஸ் தோனி நிகழ்த்திய சாதனை.!!

shyamala

Next Post

இளநீரை வெறும் வயிற்றில் அருந்தினால் ஆபத்தா?

Tue Apr 30 , 2024
Is it dangerous to drink fresh water on an empty stomach?

You May Like