fbpx

சினிமாவில் இருந்து ஃபீல்டு அவுட் ஆனாலும் இது கை கொடுக்கும்..!! பிசினஸில் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் பிரபலங்கள்..!!

பல சினிமா பிரபலங்கள் நிரந்தரமான வருமானத்திற்காகவும், மார்க்கெட் போனால் என்ன செய்வது என்ற பயத்திலும் பல சைடு பிஸ்னஸ்களை செய்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான ரசிகர்குக்கு இது பெற்றி தெரியாது. பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி என பலரும் ஹோட்டல் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். அதே போல தான் பல தமிழ் சினிமா பிரபலங்களும் ஹோட்டல் நடத்தி வருகின்றனர்.

சினிமாவில் நிரந்தர வருமானம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் ஃபீல்டு அவுட்டாக வாய்ப்பிருக்கிறது. இதனால், சில சினிமா பிரபலங்கள் மிக உஷாராக ஹோட்டல் தொடங்கி நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். அவர்கள் யார் யார் என்பதையும், அவர்கள் நடத்தும் ஹோட்டலின் பெயர்களையும் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சூரி

நடிகர் சூரி பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாகியுள்ளார். இவர் மதுரையிலும், சென்னையிலும் அம்மன் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டல்கள் மிகவும் பிரபலமானது என்றும் இதன் மூலம் இவர் பல லட்சம் சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்து, சீரியலில் நடித்து பின்பு சினிமாவில் கதாநாயகியாக ஆனவர். சமீபகாலமாக இவர் நடித்த எல்லா படங்களும் படுதோல்வி அடைந்து வருகிறது. எனவே, விரைவில் இவரின் மார்க்கெட் அவுட்டாகி விடும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இவர் உஷாராக Liams Dinner என்ற ஹோட்டலை தொடங்கியுள்ளார். சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ஹோட்டலின் மூலம் வரும் வருமானத்தை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில், சில மாதங்களுக்கு முன்பு இவர் சென்னையில் ஹோட்டல் தொடங்கி நடத்தி வருகிறார்.

கருணாஸ்

பல படங்களில் காமெடி நடிகராக நடித்த கருணாஸ், பிறகு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். இதனால் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் போனது. பின்னர் அவர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், இவர் karunas naan என்ற பெயரில் சென்னையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். எனவே, சினிமாவும், அரசியலும் கைவிட்டால் கூட ஹோட்டலில் வரும் வருமானம் இருக்கும் என்று ஸ்மார்ட்டாக யோசித்து ஹோட்டல் நடத்தி வருகிறார்.

ஆர்யா

நடிகர் ஆர்யா, சென்னை அண்ணா நகரில் சொந்தமாக Sea Shell என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார். என்னதான் நன்றாக நடித்தாலும், பெரிய அளவில் நடிகர் ஆர்யாவின் படங்கள் வெற்றி பெறவில்லை. சார்பட்டா பரம்பரைக்கு பிறகு இவரின் படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. இதனால் தானோ என்னவோ, ஆர்யா ஹோட்டல் நடத்தி வருகிறார். 

ஜீவா

முற்றிலும் மார்க்கெட் இழந்துவிட்ட நடிகர் ஜீவா, சென்னையில் One mb என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார். அப்போது நல்ல படங்களில் நடிக்கும் ஜீவா, பெரும்பாலும் சொதப்பலான படங்களை தேர்வு செய்து நடித்ததால், அவரின் சினிமா வாழ்க்கையே கேள்விக்குறியாக தான்  உள்ளது. அடுத்து அவருக்கு பெரிதாக படவாய்ப்பு ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. எனினும் அவருக்கு ஹோட்டல் மூலம் ஓரளவுக்கு நன்றாக வருமானம் வருவதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

பனியன் கம்பெனியில் பழக்கம்..!! வீட்டிற்கே வரவழைத்து உல்லாசம்..!! 3 பிள்ளைகளையும் தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம்..!!

Fri Jul 14 , 2023
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குறிஞ்சி நகரை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக இளம்பெண் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில், கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கணவர் மற்றும் […]

You May Like