விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். பரபரப்பு மற்றும் பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது என்பதால், இந்த நிகழ்ச்சியை பலரும் விரும்பி பார்க்கின்றனர். இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடித்து நிலையில், விரைவில் 7-வது சீசன் நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டிருந்தது. அதில், இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீடு என்று கூறி கமல்ஹாசன் கூறியிருந்தார். எனவே, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. மறுபுறம், இந்த பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் தயாராகி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 7-ஐ தொகுத்து வழங்க கமல்ஹாசன் கேட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கமல்ஹாசன் ரூ.130 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. கடந்த சீசனில் கமல் ரூ.75 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால், இந்த சீசனில் கிட்டத்தட்ட தனது சம்பளத்தை டபுள் மடங்காக கமல்ஹாசன் உயர்த்தியிருக்கிறார். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி செப்டம்பர் 17 அல்லது 24ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.