நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மும்பையில் ரூ.65 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் – ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்போது அதிக படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். கடந்த 2018ஆம் முதல் இவர் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், சமூக வலைதளங்களில் இவர் ஆக்டிவாக உள்ளார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மிலி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜான்வியின் பெற்றோருக்கு சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீடுகள் உள்ளன. இந்நிலையில் மும்பை மேற்கு பாந்த்ராவில் ஜான்வி கபூர் சொந்தமாக சொகுசு வீடு ஒன்றை வாங்கியுள்ளார். சொகுசு அப்பார்ட்மென்டில் முதல் மற்றும் 2ஆம் தளத்தை ஜான்வி கபூர் வாங்கியுள்ளார். இந்த வீட்டில் ஜிம், நீச்சல் குளம், மினி ஹோட்டல், தியேட்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அவர் வாங்கியுள்ள வீட்டின் மதிப்பு ரூ.65 கோடி என்று கூறப்படுகிறது. பத்திரப்பதிவு மட்டும் ரூ.4 கோடிக்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.