fbpx

கவுண்டமணியால் சினிமாவை விட்டு விலகிய பிரபல நடிகைகள்..!! இந்த லிஸ்ட்ல இவரும் இருக்காரா..?

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட காலத்தில் காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நிறைய நடிகைகள் தற்போது மீடியாக்களின் முன்பு அவர்களுடைய கடந்த கால வாழ்க்கையை பற்றியும், அவர்கள் பட்ட கஷ்டங்களை பற்றியும் பேசி வருகின்றனர். முன்னணி காமெடி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களின் சிபாரிசு ரொம்பவும் முக்கியம் என்றும், இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பேட்டி கொடுக்கிறார்கள். இதில் தற்போது நகைச்சுவை மன்னன் கவுண்டமணியுடன் நடித்த ஒரு சில நடிகைகள் அவரைப் பற்றி பேட்டிகளும் கொடுத்து வருகின்றனர்.

ஷர்மிலி : நடிகை ஷர்மிலி கவுண்டமணியுடன் இணைந்து நிறைய காமெடி காட்சிகளில் அவருக்கு மனைவியாகவும், காதலியாகவும் நடித்திருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு கட்டத்தில் கவுண்டமணி தனக்கு வந்த வாய்ப்புகள் அத்தனையுமே பறித்து வேறு ஒரு நடிகைக்கு கொடுத்து விட்டதாகவும், இதனால் தான் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டதாகவும் கூறியுள்ளார். கவுண்டமணியால் தன்னுடைய சினிமா கேரியர் தொலைந்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.

ஒய்.விஜயா : தமிழில் வில்லியாகவும், கவர்ச்சி நடிகையாகவும் நடித்தவர்தான் நடிகை ஒய்.விஜயா. கவுண்டமணி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இவருக்கு தொடர்ந்து தன்னுடைய படங்களில் வாய்ப்பு வழங்கி வந்தார். விரலுக்கேத்த வீக்கம் திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்த கவுண்டமணிக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார். தற்போது இவர் சினிமாவில் எந்த ஒரு படங்களிலும் தலை காட்டுவதில்லை.

மேனகா : நகைச்சுவை மன்னன் கவுண்டமணியின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் நடிகை மேனகாவுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். அவருடன் நடித்த காமெடிகளில் எல்லாம் இரட்டை அர்த்த வசனங்கள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இந்த நடிகையும் கவுண்டமணியை நம்பி மோசம் போனவர் என்று சொல்லப்படுகிறது.

லலிதா குமாரி : 90களின் காலகட்டத்தில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்த டிஸ்கோ சாந்தியின் உடன் பிறந்த தங்கை தான் இந்த லலிதா குமாரி. இவர் கவுண்டமணி செந்தில் காமெடி டிராக்குகளில் நடித்திருக்கிறார். டிஸ்கோ சாந்திக்கு ஏற்கனவே சினிமாவில் அதிக அனுபவம் இருந்ததால் லலிதா குமாரி ரொம்பவும் உஷாராக சினிமாவில் இருந்து ஒதுங்கி நடிகர் பிரகாஷ்ராஜை திருமணம் செய்து கொண்டார்.

வாசுகி : நடிகை வாசுகி நிறைய படங்களில் கவுண்டமணியின் மனைவியாக நடித்திருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரிக்சா மாமா திரைப்படத்தில் டீச்சர் வேடம் அணிந்து பிச்சை எடுக்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆரம்ப காலங்களில் அதிகமாக வாய்ப்பு கொடுத்த கவுண்டமணி, அதன்பிறகு இவரை கழட்டி விட்டு விட்டார். பல ஆண்டுகள் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர், அதன் பின்னர் ஆதித்யா சேனலில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

Chella

Next Post

இன்னும் 10 நாட்கள் தான் செந்தில் பாலாஜிக்கு கெடுவிதித்த நீதிமன்றம்…..! அரசு தரப்புக்கு பின்னடைவா…..?

Tue Jul 4 , 2023
செந்தில் பாலாஜி தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் 14ஆம் தேதி இரவு கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக தெரிவித்து, அவருடைய மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த […]

You May Like