பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் தெலுங்கில் பிரபாஸ் உடன் புராஜெக்ட் கே, ஷாரூக்கானுடன் ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று தனது வீட்டில் இருந்தபோது தீபிகா படுகோனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் பல்வேறு சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை மருத்துவமனை சார்பிலோ அல்லது தீபிகா சார்பிலோ எந்த தகவலும் வெளியாகவில்லை.

சில வாரங்களுக்கு முன் பிரபாஸின் புராஜெக்ட் கே படத்தில் நடித்தபோதும் தீபிகா உடல்நலம் பாதிக்கப்பட்டார். அப்போது ,அவரது இதய துடிப்பு வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாகக் கூறப்பட்டது. அதற்கான சிகிச்சை மேற்கொண்ட பின் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றார். இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.