விஜய் டிவியில் அக்டோபர் 1ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 7 தொடங்க இருக்கிறது. வழக்கம்போல கமல்ஹாசன் தான் இம்முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். முன்பு எப்போதும் இல்லாத வகையில், இந்த சீசனில் மொத்தம் இரண்டு வீடுகள் இருக்க போகிறது. அதனால் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, போட்டியாளராக யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என நாளொரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பப்லூ பிரித்விராஜ், ஜாக்குலின், மாகாபா ஆனந்த், பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, தர்ஷா குப்தா, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று செய்தி பரவி வருகிறது.
மேலும், நேற்றைய தினம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் குமரனும் இணையப்போவதாக தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து, ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜாவும் பிக்பாஸ் சீசன் 7இல் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முதல் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.