fbpx

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல கிளாமர் நடிகை..!! அப்படினா அது கண்டிப்பா நடக்கும்..!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து விட்ட நிலையில், தற்போது 7-வது சீசன் தொடங்க இருக்கிறது. சமீபத்தில் இந்த சீசனுக்காக கமல் நடித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருந்தது. அதுமட்டுமின்றி, இந்த சீசனில் 2 வீடுகள் இருக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

அந்தவகையில், செப்டம்பர் 24ஆம் தேதி அல்லது அக்டோபர் 7ஆம் தேதி பிக்பாஸ் தொடங்கும் என கூறப்படுகிறது. அத்தோடு இந்த சீசனில் மாகாபா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது வெளியான தகவலின்படி, பிரபல கிளாமர் நடிகை கிரண் ரத்தோட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. தமிழில் ஜெமினி, வின்னர் படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் கிரண். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், பிக்பாஸ் 7 இல் இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Chella

Next Post

சிரிப்பு இதய நோயிலிருந்து மனிதர்களை பாதுகாக்கிறதா…? புது தகவலா இருக்கே…!

Tue Sep 5 , 2023
பொதுவாக வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும் என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், அந்த பழமொழி உண்மைதானா? என்பது பற்றி தற்போது நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். சிரிப்பு என்பது இதய ஆரோக்கியம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. நாம் சிரிக்கும் சமயத்தில், மூளை எண்டோர்பின் மற்றும் டோபமைன் என சொல்லக்கூடிய, ஹார்மோன்களை வெளியிடுகிறது. எண்டோர்பின் ஹார்மோன் மன அழுத்தத்தை குறைத்து, உயர் இரத்த […]

You May Like