fbpx

பிரபல மூத்த தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் மாரடைப்பால் மரணம்..!! திரையுலகினர் சோகம்..!!

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60.

தயாரிப்பாளர் நிதின் மோகன், போல் ராதா போல், லாட்லா, ரெடி, பூட் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து, புகழ்பெற்றவர். நிதினுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக, நவி மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அவரது மகள் தெரிவித்துள்ளார். நிதின் இதயக் கோளாறு காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பிரபல மூத்த தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் மாரடைப்பால் மரணம்..!! திரையுலகினர் சோகம்..!!

இவரது மரணத்திற்கு நடிகர் அக்ஷய் கண்ணா, அவரின் குடும்பத்தை தொடர்பு கொண்டு தமது இரங்கல் செய்தியை பதிவு செய்தார். மேலும், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நிதின் மன்மோகன் – அக்ஷய் கண்ணா இருவரும் தீவாங்கி, ‘கலி கலி சோர் ஹை’ படங்களில் இணைந்து பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

5,000க்கும் அதிகமான உரிம ஒப்பந்தங்களை என்ஆர்டிசி முடித்துள்ளது...! மத்திய அரசு தகவல்

Fri Dec 30 , 2022
தொழில்நுட்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5000க்கும் அதிகமான உரிம ஒப்பந்தங்களை என்ஆர்டிசி முடித்துள்ளது. டெல்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், 1953ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து, ஏறத்தாழ அனைத்துத் தொழில் துறைகளிலும் தொழில்நுட்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5000க்கும் அதிகமான உரிம ஒப்பந்தங்களை என்ஆர்டிசி முடித்துள்ளது என்றார். இந்தியாவில் 2000க்கும் அதிகமான காப்புரிமைகளை தாக்கல் செய்வதற்கும் இது உதவியுள்ளது என்று அமைச்சர் கூறினார். மத்திய […]

You May Like