நடிகர் விஜய் பாடி நேற்று வெளியான ’’ரஞ்சிதமே, ரஞ்சிதமே’’ பாடல் ஏற்கனவே வெளியான திரைப்படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்ட மெட்டுதான் என்று தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ரஞ்சிதமே பாடல் வெளியாகி உள்ள நிலையில் அது பழைய பாடலின் காப்பி எனவும், தெலுங்கில் கலக்கி வரும் இசையமைப்பாளர் தமன், தமிழுக்கு மட்டும் காபி பாடலை கொடுத்திருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ரஞ்சிதமே’ நேற்று யூடியூபில் வெளியானது. தமன் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. பாடலில் இடையில் வரும் மெட்டுக்கள் கடந்த காலங்களில் கிராமப்புறங்களில் மெகா ஹிட் அடித்த ‘மொச்ச கொட்ட பல்லழகி’ பாடலின் மெட்டு எனவும் அதை தெரியாமல் சுட்டு இசையமைப்பாளர் தமன் தனது பாடலில் பயன்படுத்தியிருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.
https://m.facebook.com/story.php?story_fbid=1565476910565404&id=100013093306159&scmts=scwsplos