தேசிய விருது வாங்கிய முதல் 5 தமிழ் திரைப்படங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மலைக்கள்ளன்:
![’மறக்குமா நெஞ்சம்’..!! தேசிய விருது பெற்ற முதல் 5 தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/12/maxresdefaultdddd-1024x576.jpg)
1954ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் மலைக்கள்ளன் படம் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்தது. இத்திரைப்படம் 6 மொழிகளில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். மறைந்த கருணாநிதி இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இப்படம் 90 லட்சம் ரூபாய் வரை வசூல் சாதனை படைத்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழில் முதல் ஜனாதிபதி பரிசு பெற்ற தமிழ்த் திரைப்படம் ஆகும்.
அந்த நாள்:
![’மறக்குமா நெஞ்சம்’..!! தேசிய விருது பெற்ற முதல் 5 தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/12/andha-naal-1954-featured-1024x683.jpg)
1954 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தரம் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த அந்த நாள் படம் ஒரு மர்மம் நிறைந்த திகில் கதைக்களத்தை கொண்டு அமைந்துள்ளது. இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வந்த முதல் திரைப்படமாகும். சிவாஜி கணேசன் கொலை செய்யப்படும் மர்மத்தை துப்பறிவாளன் கண்டு பிடிப்பது போன்ற கதையைக் கொண்டுள்ளது. இப்படம் அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது.
எதிர்பாராதது:
![’மறக்குமா நெஞ்சம்’..!! தேசிய விருது பெற்ற முதல் 5 தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/12/hqdefault.jpg)
1954இல் வெளிவந்த எதிர்பாராதது படத்தை இயக்குனர் சி எச் நாராயணமூர்த்தி இயக்கியுள்ளார். இதில், நடிகையர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த படம் அந்த ஆண்டிற்கான சிறந்த தேசிய விருதும் வாங்கியது.
மங்கையர் திலகம்:
![’மறக்குமா நெஞ்சம்’..!! தேசிய விருது பெற்ற முதல் 5 தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/12/LANDSCAPE_169_mangayar-thilagam-l-1024x576.jpg)
1955இல் இயக்குனர் எல்வி பிரசாத் இயக்கத்தில் வெளியான தமிழ்மொழி திரைப்படம் ஆகும். சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த படம் அந்த ஆண்டிற்கான தேசிய விருதையும் வாங்கி பெருமையை பெற்றது.
குலதெய்வம்:
![’மறக்குமா நெஞ்சம்’..!! தேசிய விருது பெற்ற முதல் 5 தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/12/குலதெய்வம்.jpeg)
1956ஆம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ணா பஞ்சுவின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் குலதெய்வம். இக்கதை கூட்டுக் குடும்பத்தின் சிறப்பையும் விதவை மறுமண கருத்தையும் கொண்டது. சமுதாய ரீதியாக இந்து விதவை மறுமணச் சட்டம் அமலில் இருந்தும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதை குறித்த கதைக்களத்தை கொண்டு அமைந்த திரைப்படமாகும். குலதெய்வம் திரைப்படம் 1956ஆம் ஆண்டு காண சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது.