தொடங்கியது விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன்-6. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் கடந்துள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் திரைத்துரை மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலங்களாக உள்ளவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் யார் இந்த நிகழ்ச்சிக்கு வரப்போவது என்பதின் பட்டியல் நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. அதில் வந்த பெயர்களில் ஒன்று தான் ஜிபி முத்து. உண்மையில் அவர் பிக்பாஸ் வீட்டினுள் முதல் ஆளாக நுழைந்தார்.
இந்நிலையில் ஜிபி முத்துவை அழைத்த கமல்ஹாசன் அவருக்கு அவருடைய குறும்படம் ஒன்றை காண்பித்தார். இது வழக்கமான ஒன்று தான், பிறகு பேசிய கமல்ஹாசன் ஜிபி முத்துவிடம் நீங்க வழக்கமாக பேசும் வாட்டர வழக்குல திட்டுறத பிக்பாஸ் வீட்டினுள் பேசக்கூடாது என்று அறிவுரை வழங்கினார். மேலும் ஜிபி முத்துவின் குடும்பத்தாரை மேடைக்கு அழைத்தார். அப்போது கண் கலங்கிய ஜிபி முத்துவை கட்டி தழுவி வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். மேலும் ஜிபி முத்துவின் சிம்ப்ளிசிட்டியையும் பாராட்டினார் கமல்ஹாசன். ஜிபி முத்துவை தொடர்ந்து ராப் சிங்கர் வசந்தும் வீட்டினுள் வந்தார்.