பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் ஹரிஷ் கல்யாண், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதுக்கு முன் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் அவர் 2010-ல் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் தான் நடிகை அமலா பாலும் அறிமுகமானார். பிறகு வில் அம்பு போன்ற படங்களில் நடித்தும் பெரிதாக பேசப்படவில்லை. 2017ல் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வந்தவுடன் யுவன் கூட்டணியில் “பியார் பிரேமா காதல்” படம் மூலம் அனைவராலும் பேசப்பட்டவர் ஹரிஷ் கல்யாண். மேலும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே படங்கள் இவருக்கு நல்ல படமாக அமைந்தது.
ஹரிஷ் கல்யாண் தனது திருமண செய்தியை ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார். வருங்கால மனைவியின் கையைப் பிடித்திருக்கும் படத்தைப் ஷேர் செய்துள்ள அவர், ‘புதிய தொடக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனைவி யார் என்பதையும் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். தனது வருங்கால மனைவியின் பெயர் நர்மத உதயகுமார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள ஹரீஷ் கல்யாண், தனது திருமணம் குறித்து ஒரு பக்கத்திற்கு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் “தன்னுடைய குழந்தை பருவத்திலிருந்தே எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் தனக்கு கிடைத்ததாக கூறியுள்ளார்.தன்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் தன் பெற்றோர் ஊக்குவித்தர்கள் என்றும் அதே போலவே இப்போது நீங்கள் அனைவரும் அன்பையும் ஆதரைவயும் காட்டி வருகிறீர்கள். நீங்கள் அனைவரும் சினிமா உலகில் என் சிறுசிறு வெற்றிகளை பதிக்க உதவியவர்கள். ஒவ்வொரு வெற்றியையும் மைல்கல்லையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்திகரமான பகுதியாகும்.இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தை தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். எங்கள் பெற்றோர்கள் குடும்பத்தினர் திரையுலக நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன் நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.