fbpx

’கொஞ்சம் ஓவராதான் போயிட்டமோ’..!! வாரிசு படத்தால் பிரபல நடிகரின் வீட்டை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள்..!!

’வாரிசு’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின்போது விஜய் தான் நம்பர் ஒன் என தெரிவித்த பிரபல நடிகரின் வீட்டை ரஜினி ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விஜய்யின் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில், பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். மேலும், விஜய்யின் மேடை பேச்சின் போது ஒவ்வொரு வார்த்தைக்கும் விசில் சத்தம், கைத்தட்டல் என அரங்கமே அதிர்ந்தது. இந்நிகழ்ச்சியில் முக்கியமாக நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், ஷாம், வம்சி, ரஞ்சிதமே புகழ் பாடகி மான்சி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். இதற்கிடையே இப்படம் குறித்தும், விஜயை குறித்தும் பலரும் மேடையில் புகழ்ந்து பேசிய நிலையில், நடிகர் சரத்குமார் சற்று ஓவராக விஜயை புகழ்ந்து தள்ளினார். இந்த புகழ்ச்சியால் ரஜினி ரசிகர்கள் அவரது வீட்டிற்கு படையெடுத்து சென்ற சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

’கொஞ்சம் ஓவராதான் போயிட்டமோ’..!! வாரிசு படத்தால் பிரபல நடிகரின் வீட்டை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள்..!!

மேடையில் வாரிசு படத்தை பற்றி மட்டும் பேசாமல், சரத்குமாரின் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட்டான சூரியவம்சம் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் குறித்து பேசினார். அப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் என அப்போதே நான் அந்த மேடையில் தெரிவித்ததாகவும், இன்று அவர் நம்பர் ஒன்னாக உள்ளது தனக்கு மகிழ்ச்சியாக உள்ளதாக சரத்குமார் பேசினார். அன்று இவர் கூறிய அந்த வார்த்தை அரங்கத்தை அதிர வைத்திருந்தாலும், இன்று அவரது வீட்டையே அதிரவைத்துள்ளது. இவர் விஜய்யை நம்பர் ஒன் என்று சொல்லி சூப்பர் ஸ்டாரை அவமானப்படுத்தியுள்ளதாக அவரது ரஜினி ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

’கொஞ்சம் ஓவராதான் போயிட்டமோ’..!! வாரிசு படத்தால் பிரபல நடிகரின் வீட்டை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள்..!!

இதன் காரணமாக சென்னை திருவான்மியூரில் உள்ள சரத்குமாரின் வீட்டிற்கு கூட்டமாக சென்ற ரஜினி ரசிகர்கள், அவரை முற்றுகையிட்டனர். இதனைப் பார்த்து மிரண்டு போன சரத்குமார், உடனே ரஜினி ரசிகர்கள் மன்ற தலைவரான சத்யநாராயணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு இனி இப்படியெல்லாம் பேசமாட்டேன், மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார். இவரது பகிரங்கமான மன்னிப்பை ஏற்றுக் கொண்ட ரஜினி ரசிகர்கள், இனி இதுபோல ரஜினியை தாழ்த்தி எங்கேயும் பேசக்கூடாது என சரத்குமாருக்கு எச்சரிக்கை விடுத்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சற்றுநேர கூட்டத்தால் திருவான்மியூர் பகுதியே பரபரப்பானது.

Chella

Next Post

புகைப்படம் எடுக்க நினைத்து உறைபனியால் உயிர் பரிபோன சம்பவம்..! 

Thu Dec 29 , 2022
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முத்தனா (49). இவரது மனைவி ஹரிதா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அமெரிக்காவின் அரிசோனாவில் நாராயணா குடும்பத்துடன் வசித்து வருகிறார். கிறிஸ்துமஸ் விடுமுறையில் நாராயணா தனது மனைவி ஹரிதா மற்றும் இரண்டு மகள்களுடன் பயணம் செய்தார். மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் கோகோனியோ நகரில் உள்ள ஆற்றுக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. […]

You May Like