விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்த ஆரம்பத்தில் கோபிநாத் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளே உள்ளனர். சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும், பல்வேறு புதிய நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுகின்றன. இந்த விஜய் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த சில ஷோ இப்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அப்படிபட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ’நீயா நானா’. இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப தலைப்புகள் வைத்து அதை சுவாரஸ்யமாக கொண்டு செல்வார் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத். இந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த பிரபலமே நீயா நானா கோபிநாத் என்ற பெயர் வந்தது. தற்போதும் இந்த ஷோ ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தொலைக்காட்சியில் சேர்ந்த ஆரம்பத்தில் கோபிநாத் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். அப்போது எடுத்த ஒரு புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் கோபிநாத் செய்தி வாசிப்பாளராக இருந்தாரா? என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.