fbpx

நாயகன் மீண்டும் வரார்! விஜய் டிவிக்குள் மீண்டும் நுழைந்த ஜிபி முத்து! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?

சற்றேறக்குறைய ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் திரைத்துறையில் நுழைய வேண்டும் என்றால் அதற்கு மிகப் பெரிய தியாகங்களை எல்லாம் செய்ய வேண்டி வரும். அதோடு மட்டுமல்லாமல் சாப்பிட சாப்பாடு கூட இல்லாமல் பல தயாரிப்பாளர்கள் மற்றும் சின்னத்திரை அலுவலகங்களுக்கு முன்னால் தவமாய் தவமிருந்து அதன் பிறகு தான் வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் தற்போது அப்படியான எந்த சிக்கலும் இல்லை, பொதுமக்களிடையே பிரபலமாக வேண்டும் என்ற ஒரே நிபந்தனை தான். அப்படி பிரபலமாவதற்கும் பல டிஜிட்டல் ஊடகங்கள் தற்போது வந்து விட்டனர். முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்துவிட்டால் போதும் திரை துறையில் மிகவும் சுலபமாக நுழைந்து விடலாம்.https://www.instagram.com/p/Cl-n6SOS4um/?utm_source=ig_embed&ig_rid=77bded13-f324-42a8-bb3d-92f96afb1bc4

அப்படி டிக் டாக் செயலியில் பிரபலமாக இருந்து தற்போது பிக்பாஸ் வரையில் பிரபலமானவர்தான் ஜி பி முத்து டிக் டாக் மூலமாக பிரபலமான இவர், தற்சமயம் ஒரு யூட்யூப் சேனலை ஆரம்பித்து பல வீடியோக்களை வெளியிட்டவாறு இருந்து வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் இவருடைய ஸ்பீச்சிங் ஸ்டைலுக்கே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.அதோடு, இவர் எப்போது வீடியோவை வெளியிடுவார் என்று பல ரசிகர்கள் youtube வலைதளத்தையே நோட்டமிட்டவாறு இருந்து வருகிறார்கள்.

இவர் சமீபத்தில் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாம் பாகத்தில் பங்கேற்றார் நிச்சயமாக பிக் பாஸ் பட்டத்தை இவர்தான் வெல்லப்போகிறார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென்று அந்த வீட்டிலிருந்து சுய விருப்பத்தின் பேரில் வெளியேறினார்.

ஆனால் தற்சமயம் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ஷோ ஒன்றிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜிபி முத்து வருகை தந்துள்ளார். பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்டோர் தொகுத்து வழங்கும் என்ற ரியாலிட்டி ஷோவில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் பங்கேற்று வருகிறார்கள்.இதற்கான புகைப்படத்தை விஜய் டிவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Next Post

வாகன ஓட்டிகளே...! யாரும் தப்பிக்க முடியாது...! அனைத்து இடத்திலும் வந்தது புதிய நடைமுறை...!

Sun Dec 11 , 2022
பெங்களூரில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய தானியங்கி முறையை பெங்களூரு போக்குவரத்து போலீசார் செயல்படுத்தியுள்ளனர். பெங்களூருவில் உள்ள போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிமீறல்களை தானாகக் கண்டறிந்து சலான்களை வழங்குவதற்காக நகரைச் சுற்றி ஒரு நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பை நிறுவியுள்ளனர். பெங்களூரு போக்குவரத்து காவல்துறை காவல்துறையின் செயல்பாடுகளில் தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. போக்குவரத்து விதிமீறல்களைத் தொடர்பில்லாத தானியங்கி அமலாக்கத்தை நோக்கிச் செயல்படும் நுண்ணறிவு […]

You May Like