நடிகர் சரத்குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல தமிழ் நடிகரான சரத்குமார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்றுப்போக்கு காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு அவர், தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ள நிலையில், அவர் மருத்துவர்களின் சிறப்பு கண்காணிப்பில் இருந்து வருகிறார். இதனால் ரசிகர்கள் கவலையில் அடைந்துள்ளனர்.