பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஷிவின் கெட்ட வார்த்தை மற்றும் ஆபாசமாக பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2 சீசன்களாக திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சீசனில் நமீதா மாரிமுத்து பங்கேற்றார். ஆனால், பிக்பாஸ் வீட்டில் இருந்து இடையிலேயே திடீரென வெளியேறினார். தற்போது சீசன் 6 நிகழ்ச்சியில் ஷிவின் பங்கேற்றுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே டாஸ்க்குகளை சிறப்பாக விளையாடி வருகிறார் ஷிவின். இதேபோல் வாக்குவாதங்கள் ஏற்படும் இடங்களிலும் தனது பாயிண்டுகளை நச்சென எடுத்து வைக்கிறார். இருப்பினும் ஷிவின் ரொம்பவே கோபப்படுவதாக ஹவுஸ்மேட்ஸ் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஷிவின் பிக்பாஸ் வீட்டில் கெட்ட வார்த்தைகள், ஆபாசமாக பேசும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெட் ரூம்மில் சீப்பை வைத்து தட்டிக் கொண்டிருக்கும் ஷிவின், திடீரென சொல்ல முடியாத அளவுக்கு அமுதவாணனை பச்சையாக ஒரு கெட்ட வார்த்தையை சொல்லி திட்டுகிறார். பேசிவிட்டு தனது முகத்தை மூடிக் கொள்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத கதிர், அய்யய்யோ என்னென்ன வார்தை பேசுறாங்க இவங்க என அதிர்ச்சியாகிறார். இந்நிலையில், ஷிவின் ஆபாசமாக பேசிய மற்றொரு வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள், அசீம் பேசினால் மட்டும் கண்டிக்கிறீர்கள்.. ஷிவின் பேசுவதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்..? என கமல்ஹாசனை குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அசீமின் கிரிக்கெட் பேட் பிரச்சனையின் போதும் ஷிவின் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தினார் என்றும் இதனையும் கமல்ஹாசன் கண்டிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சிலர், ஆண் போட்டியாளர்கள் ஏதாவது தப்பு செய்தால், குறிப்பாக அசீம் தப்பு செய்தால், கடுமையாக கண்டிக்கும் கமல், அதுவே பெண் போட்டியாளர்கள் செய்தால் கண்டிப்பதில்லை என்றும் விக்ரமன் ஒரு அரசியல்வாதி என்பதால், அவருக்கு கமல்ஹாசன் ஜால்ரா தட்டுவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.