fbpx

இதை கவனிச்சிருக்கீங்களா..? கமலும் நயன்தாராவும் ஏன் சேர்ந்து நடித்ததில்லை..? காரணம் இதுதான்..!!

தென்னிந்தியாவின் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. இவர், சமீப காலமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகருடன் பல திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். தற்போது அட்லி பாலிவுட்டில் இயக்கி வரும் “ஜவான்” திரைப்படத்தில் ஷாருக் கானுடன் நடித்து வருகிறார். இதுவரை ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் நயன்தாரா நடித்திருந்தாலும் இதுவரை கமல்ஹாசனுடன் ஒரு திரைப்படத்தில் கூட நடித்ததில்லை.

இதை கவனிச்சிருக்கீங்களா..? கமலும் நயன்தாராவும் ஏன் சேர்ந்து நடித்ததில்லை..? காரணம் இதுதான்..!!

இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்திலாவது நடிப்பார் என ரசிகர்கள் ஆவலோடுதான் காத்திருக்கின்றனர். ஆனால், அதற்கான எவ்வித முகாந்திரமும் தற்போது வரை இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், நயன்தாரா கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து நடிக்காதது குறித்து ஒரு வீடியோவில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். “கமல்ஹாசனும் நயன்தாராவும் சேர்ந்து நடிக்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இப்போது கமல்ஹாசன் நடித்துக்கொண்டிருக்கின்ற படங்களில் கதையமைப்பும் ஒரு காரணமாக இருக்கிறது. அதில் நயன்தாராவுக்கு பொருத்தமான பாத்திரங்கள் இருக்க வேண்டும் அல்லாவா? நயன்தாராவுக்கு வேலை வைக்கும் கதாப்பாத்திரமாக இருந்தால்தானே நயன்தாராவை அதில் நடிக்க வைக்க முடியும்” என அந்த வீடியோவில் சித்ரா லட்சுமணன் கூறியிருந்தார்.

Chella

Next Post

#திண்டுக்கல்: மிஸ்டு கால் நம்பி வாழ்க்கையை இழந்த இளம்பெண்.. நெருக்கமாக இருந்து விட்டு மாயமான திருமணமான நபர்..! 

Fri Jan 13 , 2023
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள நத்தம் கிராமத்தில் கிழவன்அம்பலம் என்பவரின் மகன் கார்த்திக் (31) எனபவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.  கார்த்திக்கிற்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நத்தம் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு மிஸ்டு கால் அளித்ததன் மூலம் இவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.  திருப்பூரில் வேலைபார்த்து வந்த அந்த பெண் கடந்த தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு […]

You May Like