fbpx

நடிகர் தனுஷின் புதிய வீட்டை பார்த்துள்ளீர்களா..? ரூ.150 கோடியில் பிரம்மாண்டம்..!! வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையால் வளர்ந்து நின்றவர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், கடந்த வாரம் வெளியான ‘வாத்தி’ படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் ‘கேப்டன் மில்லர்’ என்கிற படத்திலும் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், நடிகர் தனுஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டி வரும், வீட்டின் கிரகப்ரவேசம் இன்று நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த வீட்டில் தனுஷ் என்னென்ன வசதிகளுடன் காட்டியுள்ளார் என்கிற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ், கடந்த 2021ஆம் ஆண்டு, மாமனார் வீடு அமைந்துள்ள ‘போயஸ் தோட்டம்’ பகுதியிலேயே குடியேற வேண்டும் என்பதற்காக, சுமார் 25 கோடி செலவில் சென்னை போயஸ் தோட்டத்தில் 8 கிரவுண்ட் அளவிலான நிலம் ஒன்றை வாங்கினார். ரஜினிகாந்த் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் இந்த இடத்தில், தனுஷ் தன்னுடைய மனைவி, மகன்களுடன் குடியேற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், வீடு கட்டுவதற்கான பூமி பூஜையும் 2021இல் போடப்பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு, வெளிநாட்டை சேர்ந்த இன்ஜினியர்களை கொண்டு தனுஷ் இந்த வீட்டை ஹைடெக் மாடலில் கட்ட முடிவு செய்தார். 4 தளம் கொண்ட இந்த வீட்டை, ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு நிகரான வகையில் தனுஷ் டிசைன் செய்துள்ளார்.

ஒரு பிரம்மாண்ட  நீச்சல் குளம், ஒரு ஆடம்பர உட்புற விளையாட்டு திடல், உடற்பயிற்சி கூடம், லிப்ட் ஆகியவை உள்ளன. அதேபோல் தன்னுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் அவர்கள் ஆசைப்பட்டது போன்ற தனி அறைகள் சர்வதேச அளவில் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒவ்வொரு அறையிலும் இன்டீரியர் வேலைகளுக்காகவே பல லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், சில பொருட்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மனைவி, மகன்களுடன் தனுஷ் இந்த வீட்டில் குடியேறுவார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், மனைவியுடனான விவாகரத்து தனுஷின் வாழ்க்கையையே திருப்பி போட்டது. எனவே, பல கோடி செலவு செய்து கட்டிய வீட்டில், பெற்றோரை குடியேற்று அழகு பார்த்துள்ளார் தனுஷ். இதுவரை வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகாத நிலையில், கிரகப்ரவேச புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Chella

Next Post

திருச்சியில் பரபரப்பு: சினிமா பாணியில் தப்பிச்செல்ல முயன்ற ரவுடிகள்!சுட்டு பிடித்த போலீஸ்!

Mon Feb 20 , 2023
திருச்சி உறையூர் பகுதியில் ரவுடிகள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடந்த ஒரு நகை கொள்ளை சம்பவம் தொடர்பாக பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான ரவுடிகள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரையும் கைது செய்து அழைத்துச் செல்லும் வழியில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர்களை தாக்கி விட்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ள துப்பாக்கியால் […]

You May Like