கடந்த 2000ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான யுவகுடு திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் பூமிகா. இதனை அடுத்து இவர் 2001ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களின் வரவேற்பு பெற்றார். தமிழில் அதிக படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில் சில படங்களுடன் தமிழில் இருந்து விலகி தெலுங்கு சினிமாவிலேயே அதிக படங்களில் நடித்து வந்தார்.

44 வயதாகும் நடிகை பூமிகா இப்போதும் படங்களில் ஆக்டீவாக நடித்து வருகிறார். இவர் 2007ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மட்டும் இருக்கிறார். இந்நிலையில், நடிகை பூமிகா குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பூமிகாவின் மகனைப் பார்த்து, அவருக்கு இவ்வளவு பெரிய மகனா..? என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.