பிக்பாஸ் வீட்டில் அசல் கோலார் வெளியேறிய நிலையில், அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளனர்.
’ஜோர்த்தால’ எனும் பாடலை ஆடி பாடி, யூடியூப் தளத்தில் வெளியிட்டு படு பயங்கர பேமஸ் ஆனார் அசல். பின்னர், பல மேடை நிகழ்ச்சிகளில் பாட்டு பாடி வந்தார். அரிதாக கிடைத்த பிக்பாஸ் வாய்ப்பினை ஏற்று வீட்டுக்குள் நுழைந்தார். இவர் திறமைக்காகவும், இவர் வளர்ந்து வரும் இளம் வயதை சார்ந்த போட்டியாளர் என்பதற்காக மக்கள், அவர்களின் ஆதரவை தெரிவித்து வந்தனர். ஆனால், நிகழ்ச்சியில் பங்குபெற்ற இவர் டாஸ்குகளில் கவனம் செலுத்துவதை தவிர்த்துவிட்டு பெண்கள் இருக்கும் இடத்தை சுற்றி சுற்றி வந்தார்.

பல சமயங்களில், சக பெண் போட்டியாளர்களிடம் முகம் சுழிக்கும் அளவிற்கு தவறாக நடந்து கொண்டார் அசல். இதனால், மக்கள் “அவனுக்கு ரெட்-கார்ட் கொடுங்க, இவன் ஒரு பொறுக்கி, பெண்களை கட்டிப்பிடித்துக்கொண்டு இவன் செய்யும் வேலைகள் அறுவெறுப்பை தருகிறது. கமல் சார், இவனை எதிர்த்து ஏதாவது கேளுங்கள்” என்று அவர்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர். அதன் விளைவாக மக்கள், எலிமினேஷன் நாமினியாக தேர்வான இவருக்கு ச்குறைந்த ஓட்டுகளை வழங்கினர். இதனையடுத்து கடந்த வாரம் அனைவருக்கும் டாட்டா பாய் பாய் சொல்லி சென்றார் அசல்.
பிக்பாஸ் வீட்டில் 21 நாட்களை கடந்து வந்த அசல் கோலாரின் ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை இருக்கும் என்பதை முன்பு வெளியான பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள பட்டியலில் பார்த்தோம். அந்த வகையில், கூட்டி கழித்தால் 3,36,000 ரூபாயை இவர் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. இவரின் ரியல் நேம் வசந்த் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.