பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படம் 7 நாட்களில் ரூ.210 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக வாரிசு படம் உருவாகியுள்ளது. வாரிசு திரைப்படம் வெளியான 5 நாட்களில் உலகளவில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் அறிவித்திருந்தது.
இந்நிலையில், வாரிசு திரைப்படம் கடந்த 7 நாட்களில் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமாக ஸ்ரீ வெங்கடேஷ்ரா கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த 7 நாட்களில் 3 மடங்காக உங்கள் அன்பை வாரிசு திரைப்படம் பெற்றுள்ளது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.210 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.