தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி மீண்டும் சேர்ந்து வாழவுள்ள நிலையில், தனுஷிடம் ஐஸ்வர்யா செல்போனில் மனம்விட்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுஷுக்கும் யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இரு குடும்பத்தாரும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து வைத்துள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு முற்றியதால், கடந்த ஜனவரி மாதம் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். இதையடுத்து, ஐஸ்வர்யாவும் தனுஷும் தனித்தனியாக வசித்து வந்தனர். மகன்கள் இருவரும் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என மாறி மாறி இருந்து வந்தனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யாவும் தனுஷும் மீண்டும் சேர்ந்து வாழப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது. போயஸ் கார்டன் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்துள்ளனர். மகன்களின் பிடிவாதம்தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் இணைந்துள்ளதால், இருவருக்கும் ரசிகராக இல்லாதவர்கள் கூட மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், இருவர் குறித்தும் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஐஸ்வர்யா தனது காதல் கணவரான தனுஷிடம் 9 மாதங்கள் கழித்து செல்போனில் மனம்விட்டு பேசியுள்ளார்.

இருவரும் சேர்ந்து வாழ சம்மதித்த பிறகு தனஷுக்கு போன் செய்துள்ளார் ஐஸ்வர்யா. அப்போது, கேள்வி – பதில் என ஒரு சில வார்த்தைகள் பேசிய நிலையில், பெரும்பாலும் மவுனமாகவே கழிந்ததாம் அந்த கான்வெர்சேஷன். இதனைக் கேட்ட ரசிகர்கள் இத்தனை நாள் பிரிந்திருந்த நிலையில், உடனே இயல்பு நிலைக்கு வர சில நாட்கள் ஆகும்தான். ஆனால், அனைத்தையும் மறந்துவிட்டு மீண்டும் பழையபடி, நல்ல கணவன் மனைவியாகவும் பெற்றோராகவும் மற்றவர்களுக்கு உதாரணமாக வாழுந்துக்காட்டுங்கள் என கூறி, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.