fbpx

இங்கு எப்போதும் ஒரே ஷாருக்கான் தான்.. துல்கர் சல்மான் நெகிழ்ச்சி பதிவு..!

துல்கர் சல்மான் தான் தென்னிந்தியாவின் அடுத்த ஷாருக்கான் என்று ரசிகர்கள் விமர்சனங்கள் செய்து வந்தனர். மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் கதாநாயகனாக துல்கர் சல்மான் இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான “சீதா ராமம்” படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதை தொடர்ந்து இந்தி படத்திலும் நடிக்க துல்கர் சல்மானுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் “சீதா ராமம்” படம், ஷாருக்கான் நடித்த “வீர் ஜாரா”படத்தைப் போல உள்ளதாகவும், துல்கர் சல்மான் தென்னிந்தியாவின் அடுத்த ஷாருக்கான் என்று ரசிகர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதில் அளித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதாவது;-

நான் ஷாருக்கானின் பெரிய ரசிகன். அவர் தான் எல்லோருக்கும் ரோல் மாடல். அவர் மக்களிடம் நடந்து கொள்ளும் விதம், மேலும் பெண்களை அவர் நடத்தும் விதத்தை பார்த்து வியந்துள்ளேன். அவரது படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன். என்னுடைய நடிப்பில் அவரது நடிப்பின் தாக்கம் இருக்கலாம். என்னை அறியாமலேயே அது என்னிடம் இருக்கிறது. என்னை அவருடன் ஒப்பிடுவது அவரை அவமதிப்பது போல ஆகும். ஏனென்றால் எப்போதும் இங்கு ஒரே ஷாருக்கான்தான்” என்று பதிவிட்டுள்ளார்.

Rupa

Next Post

ஆபாச வீடியோ விவகாரத்தில் ட்விஸ்ட் … சண்டிகர் மாணவிக்கு மிரட்டல் அழைப்புகள் வந்ததா? …

Tue Sep 20 , 2022
சண்டிகரில் மாணவி ஒருவர் ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மர்மநபர் அழைப்புவிடுத்து மிரட்டியதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் 60 சக மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை தனது ஆண் நணபரிடம் ஷேர் செய்ததாக கூறி .. விடுதியில் மாணவர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் […]

You May Like