fbpx

நிர்வாண படத்தால் நடுங்கிப்போன கதாநாயகி..!! ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டிய மேக்கப் ஆர்டிஸ்ட்..!!

நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவதாக கூறி கன்னட நடிகைக்கு அவரது மேக்கப் ஆர்டிஸ்டே மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கன்னட படங்களில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நாயகியாக நடித்து வந்த நடிகைக்கு தற்போது பணம் கேட்டு மிரட்டல் விடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்த நிலையில், மிரட்டல் விடுத்தவரை கைது செய்துள்ளனர். முன்னதாக தன்னுடைய முழு மற்றும் அரை நிர்வாணப் படங்கள் தன்னிடம் உள்ளதாகவும் உடனடியாக ரூ.30 லட்சம் கொடுத்தால் மட்டுமே அதை ஷேர் செய்யாமல் இருப்பேன் என்றும் அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதை முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நடிகை, அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

நிர்வாண படத்தால் நடுங்கிப்போன கதாநாயகி..!! ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டிய மேக்கப் ஆர்டிஸ்ட்..!!

ஆனால், அவரது நிர்வாணப் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த அவர், போலீசாரின் உதவியை நாடியுள்ளார். இதையடுத்து இந்த விஷயம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த நடிகையின் நெருங்கிய உறவினரும் மேக்கப் ஆர்ட்டிஸ்டுமான மஹன்டேஷ் என்பவனை கைது செய்தனர். அவனிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதிலிருந்த நிர்வாண புகைப்படங்களை அழித்தனர். முன்னதாக நடிகையின் செல்போனில் இருந்து பாஸ்வேர்டை எடுத்த அந்த மேக்கப் ஆர்டிஸ்ட், அதிலிருந்து அந்தப் புகைப்படங்களை தன்னுடைய செல்போனுக்கு மாற்றியதாக தெரிகிறது.

நிர்வாண படத்தால் நடுங்கிப்போன கதாநாயகி..!! ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டிய மேக்கப் ஆர்டிஸ்ட்..!!

தன்னுடைய மொபைலை சூட்டிங்கின்போது அந்த மேக்கப் ஆர்ட்டிஸ்டிடம் கொடுத்துவிட்டு நடிகை சென்றுள்ளார். தன்னுடைய உறவினர் என்ற நம்பிக்கையில் அந்த நடிகை, தன்னுடைய மொபைலை மேக்கப் ஆர்ட்டிஸ்டிடம் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார். ஆனால், பண ஆசையில் அவர் அதை தவறாக பயன்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Chella

Next Post

’ஆன்லைன் ரம்மியால் போன உயிர் ’ …. அம்மாவுக்கு குரல் தகவல் கொடுத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்…..

Thu Oct 27 , 2022
தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட நகையை அடகு வைத்துவிட்டு பின்னர் பணத்தை இழந்த இளைஞர் அம்மாவுக்கு உருக்கமான குரல் பதிவு செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே ஸ்ரீவைகுண்ட பெருமாள் புரம் பகுதியை சேர்ந்தவர் பூபதிராஜா (27). தனியார் மின்சக்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் உள்ளூரில் எலக்ட்ரிக்கல் வேலையும் செய்து வந்தார். 23ம் தேதி வெளியே வேலை […]

You May Like