யாரும் இல்லாத நேரம் பார்த்து, கேமரா முன் மன உருக்கத்துடன் பேசிய ஜி.பி. முத்துவின் வீடியோ வெளியாகி உள்ளது.
டிக்டாக் புகழ் ஜி.பி. முத்து மனம் வருந்தி அழுது, தனது உருக்கமாக பேசியுள்ளார். பிக்பாஸ் 6-வது சீசனில் முதன்முதலாக, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் ஜி.பி.முத்து. டிக்டாக் மூலம் பிரபலமடைந்த இவர், பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். அதன் பிறகு, யூடியூப் சேனலில் லெட்டர் படித்தே அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். பலரும் எப்போ பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள் என கேட்க, அந்த கேள்விக்கு பதிலாக இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். இவர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பே, நெட்டிசன்களுக்கு பல கண்டெண்ட் கொடுத்து அனைவரையும் மகிழ்வித்தார். பின்னர், இப்போட்டியில் இணைந்த பிறகு, இவருக்கென ஜி.பி.முத்து ஆர்மி, ஜி.பி முத்து தலைவன் என பல ரசிகர் கூட்டதுக்கு சொந்தமானார்.

பிக்பாஸ் சீசன் 6-ன் முதல் நாளிலிருந்து ஜி.பி முத்துவை சிரித்து பார்த்திருப்போம், அழுது பார்த்திருப்போம், சண்டை போட்டு பார்த்திருப்போம். ஆனால், வருந்தி பார்த்திருக்க மாட்டோம். இப்போது இணையத்தில் பகிரபட்ட வீடியோ ஒன்றில், யாரும் இல்லாத நேரத்தில் ஜி.பி முத்து பிக் பாஸ் வீட்டில் உள்ள ஒரு கேமராவுக்கு முன்வந்து, அவர் குடும்பத்தில் உள்ள நபர்களின் பெயரை கூறி இவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும். “எனக்கு மனசு தேடுது, மூச்சு முட்டுது, ட்ரெஸ் வரல, முடிஞ்ச அளவுக்கு நான் சீக்கரம் வந்துடுறேன். என் மகன், மகள் நியாபகம் வருது. இங்க நான் நல்லதான் இருக்கேன். எல்லாரும் நல்லதான் பேசுறாங்க” என்று அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு மன உருக்கமாக பேசினார்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் ஒரு மணிநேர காட்சியை தவிர்த்து, 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகிறது. அதிலிருந்து சில சுவாரஸ்ய காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.