நடிகர் பிரபுதேவாவின் பிரம்மாண்ட வீட்டின் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடன இயக்குனர் சுந்தரத்தின் மகன் ஆவார். வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுகிறார். இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனம் ஆடியிருக்கிறார். குறிப்பாக, மின்சார கனவு படத்தில் வரும் ’வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலில் மிகச் சிறப்பாக நடனம் ஆடியதற்காக இந்திய தேசிய பட விருதையும் பெற்றிருக்கிறார். இவர் முதன்முறையாக 1994ஆம் ஆண்டு “இந்து” திரைப்படத்தில் நடிகை ரோஜாவுடன் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படம் ஆகும்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் படங்களை இயக்கியும் இருக்கிறார். போக்கிரி, வில்லு போன்ற பல படங்களையும், சில இந்தி படங்களையும் இயக்கி இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணமாகி 3 குழந்தைகள் இருந்தது. ஆனால் நயன்தாராவுடன் வாழ்ந்து வருவதாகவும், முதல் மனைவியை பிரிய வழக்கு தொடுத்திருந்தார். ஆனால், முதல் மனைவி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 2012ஆம் ஆண்டு நயன்தாராவிடம் இருந்து நிரந்தரமாக பிரிந்து விட்டதாக அறிவித்திருந்தார் பிரபுதேவா. பின்னர், சென்னையில் இருக்க பிடிக்காமல் மும்பைக்கு சென்று அங்கு குடி பெயர்ந்து விட்டார். அவ்வபோது சென்னைக்கு வந்து பல படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா.

தற்போது இயக்குனராகவும், நடன இயக்குனராகவும், நடிகராகவும், படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது பிரபுதேவா தனது வீட்டை புதுப்பித்துள்ளார். மிக பிரம்மாண்டமாக இருக்கும் அந்த வீட்டின் வீடியோவை நீங்களும் காண..!