fbpx

‘ராட்சஸ மாமனே’ பாடல் உருவான விதம்.. பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ..

பொன்னியின் செல்வன் படத்தின் 3-வது பாடலான ராட்சஸ மாமனே பாடல் உருவான விதம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது.. சமீபத்தில், பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொண்டனர்.

”இந்த கதாபாத்திரத்தை எனக்கு தர கேட்டேன்”..! ஆனால்..! ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யம்..!

ஏற்கனவே வெளியான பொன்னி நதி, சோழா சோழா பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. இதே போல் பொன்னியின் செல்வன் டீசர், ட்ரையிலர் ஆகியவையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.. இதே போல் ராட்சஸ மாமனே, சொல் சொல் ஆகிய பாடல்களின் லிரிக்கல் வீடியோவையும் படக்குழு வெளியிட்டது..

இந்நிலையில் ராட்சஸ மாமனே பாடலின் உருவான விதம் குறித்த Behind The Scenes வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.. 10-ம் நூற்றாண்டில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் எப்படி கொண்டாடப்பட்டது என்பது குறித்து நேர்த்தியாக படமாக்கப்பட்டதாக நடிகர் கார்த்தி கூறுகிறார்.. மேலும் இந்த பாடலுக்கு நடனமைப்பு செய்த பிருந்தாவும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்..

சோழர்களின் வரலாற்றை பேசும், பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாகவும், விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி, மந்தாகினி என 2 வேடங்களிலும், த்ரிஷா குந்தவையாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையாகவும் நடிக்க உள்ளனர்.. இப்படத்திற்காக ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

’இது யூத்களுக்கு மட்டும்’..! பிரபல தொலைக்காட்சியின் புதிய சேனல்..! ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

Mon Sep 19 , 2022
விஜய் டிவி நிர்வாகம் தற்போது யூத்களை கவரும் வகையில், புதிய சேனல் ஒன்றை துவங்க உள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள், சீரியல்கள், பாடல்கள், காமெடி, பக்தி என அனைத்திற்கும் தனித்தனியே சேனல்கள் உள்ளன. இந்த சேனல்களுக்கிடையில் சிறப்பான போட்டி காணப்படுகின்றன. இவற்றில் சன் டிவிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் விஜய் டிவி இருக்கிறது. டிஆர்பியிலும் இந்த சேனல்களுக்கு இடையே தான் அதிக போட்டிகள் உள்ளன. இதில், விஜய் டிவி சிறப்பான […]
’இது யூத்களுக்கு மட்டும்’..! பிரபல தொலைக்காட்சியின் புதிய சேனல்..! ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

You May Like