fbpx

நான்கே நாட்களில் ‘ஜவான்’ திரைப்படம் வசூலித்தது இத்தனை கோடியா..? ஷாருக்கான் செய்த புதிய சாதனை..!!

அட்லி, ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் 2 வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. அனிருத் இசையில் இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றன. இதுவரை இல்லாத அளவில் படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாகவும், படமும் சிறப்பாக இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 2 நாட்களில் ரூ.240.47 கோடி வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக, ஜவான் திரைப்படம் 4 நாட்களில், உலகம் முழுவதும் ரூ.531 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சாதனையை மிக வேகமாக அடைந்த ஹிந்திப் படம் என்ற பெருமையையும் ஜவான் திரைப்படம் பெற்றுள்ளது. மேலும், ஷாருக்கான் ஒரு வருடத்தில் தொடர்ந்து இரண்டு ரூ.500 கோடி வசூல் செய்த ஒரே நடிகர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார்.

Chella

Next Post

”ஒரு மாசத்துக்கு எத்தனை முறை செக்ஸ் பண்ணுவீங்க”..? நெட்டிசனுக்கு செருப்படி பதில் கொடுத்த நடிகை நீலிமா ராணி..!!

Mon Sep 11 , 2023
கமல்ஹாசனின் தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. இதையடுத்து விரும்புகிறேன், பாண்டவர் பூமி போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், 15 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சின்னத்திரை பக்கம் சென்ற நீலிமா, மெட்டி ஒலி சீரியலில் சக்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து கோலங்கள், அத்தி பூக்கள், தென்றல் என ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். சீரியலில் பிசியாக இருந்தாலும் […]

You May Like