fbpx

”ஒரு மாசத்துக்கு எத்தனை முறை செக்ஸ் பண்ணுவீங்க”..? நெட்டிசனுக்கு செருப்படி பதில் கொடுத்த நடிகை நீலிமா ராணி..!!

கமல்ஹாசனின் தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. இதையடுத்து விரும்புகிறேன், பாண்டவர் பூமி போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், 15 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சின்னத்திரை பக்கம் சென்ற நீலிமா, மெட்டி ஒலி சீரியலில் சக்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையடுத்து கோலங்கள், அத்தி பூக்கள், தென்றல் என ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். சீரியலில் பிசியாக இருந்தாலும் அவ்வபோது சினிமா பக்கமும் தலைகாட்டி வந்த நீலிமா, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல, ராஜாதி ராஜா, குற்றம் 23, யாழ், கஜினிகாந்த், ருத்ரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2008இல் திருமணம் ஆனது. நடிகை நீலிமா இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நடிகை நீலிமா, அண்மையில் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினார். அப்போது நெட்டிசன் ஒருவர் நீலிமாவிடம், செக்ஸ்ல உங்களுக்கு என்ன பொசிஷன் பிடிக்கும்? ஒரு மாதத்திற்கு எத்தனை முறை பண்றீங்க? என மிகவும் கொச்சையான கேள்வியை கேட்டிருந்தார். இதைப்பார்த்து கடுப்பான நடிகை நீலிமா, இந்த அறிவு கெட்டவனுக்கு என்ன பதில் சொல்வது என பதிவிட்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Chella

Next Post

1.06 கோடி பெண்களுக்கு உரிமைத்தொகை..!! எப்போது பணம் கிடைக்கும்..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

Mon Sep 11 , 2023
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.06 கோடி பெண்கள் பயனடைவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இத்திட்டம் செப்.15ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. கடந்த சில மாதங்களாக மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில், 1.63 கோடி பேர் உரிமைத்தொகைப் பெற தகுதியுடையவர்களாக விண்ணப்பித்திருந்தனர். இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்த […]

You May Like