fbpx

’கணவர் இறந்துட்டாரு’..!! ’சாகலாம்னு நினைச்சேன்’..!! ’சூர்யா சார் தான்’..!! பேரழகன் பட நடிகையின் கண்ணீர் கதை..!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பேரழகன். இயக்குனர் சசி சங்கர் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா பெண் பார்க்கும் காட்சியில் உயரம் குறைவான பெண்ணாக சினேகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கற்பகம்.

இவர், சினிமாவை விட்டு விலகிய நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், எனக்கு 2 அண்ணன், 3 அக்கா என குடும்பம் ரொம்ப பெரிசு. நான் தான் வீட்டில் கடைசி பெண். எனக்கு 2 வயதாகும்போதே தாய் இறந்துவிட்டார். அக்கா வீட்டில் தான் வளர்ந்தேன். அங்கும் வறுமை இருந்ததால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன். தீபாவளி, பொங்கல் வந்தால் மட்டும் தான் துணி எடுத்து தருவார்கள். கிழிந்த துணியோடுதான் இருப்பேன்.

அதேபோல் பள்ளிக்கு செல்லும்போது கூட கெட்டுப்போன சாப்பாட்டைதான் கட்டித் தருவாங்க. இதனால, பசங்க எல்லாம் கேலி பண்ணி சிரிப்பாங்க. என்னுடைய பேக்கை சாக்கடையில் போட்ருவாங்க. இதனால, ஸ்கூலுக்கு போகவே அவமான இருக்கும். சாகலாம் என்று கூட நினைத்திருக்கிறேன். பிறகு ஸ்கூலுக்கு போவதை நிறுத்திவிட்டேன். அக்கா வீட்டில் இருந்து அக்காவிற்கு உதவியாக வேலை செய்து கொண்டு காலத்தை ஓட்டிவிட்டேன்.

அப்போது தான், ராஜா என்பவரை திருமணம் செய்தேன். அபூர்வசகோதரர்கள் படத்திலும் அவர் நடித்திருக்கிறார். திருமணமான ஓராண்டுக்குள் எனக்கு ஓர் மகள் பிறந்தது. அப்போது தான் மலையாளப்படமான அற்புதத் தீவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நானும் என் கணவரும் சேர்ந்தே அந்தப் படத்தில் நடித்தோம். பின்னர், ஜெயம் படத்தில் வண்டி வண்டி ரயிலு வண்டி பாட்டில் நடித்தேன்.

அதன் பிறகுதான், பேரழகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அந்த படத்தில் சினேகா என்ற கதாபாத்திரம் எனக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்த படத்தில் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். ஆனால், ஏஜெண்ட் எனக்கு பாதி சம்பளத்தைத் தான் கொடுத்தார். என் கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவருக்கு நரம்பு தளர்ச்சி இருந்தது. இதனால், அவரால் நடிக்க முடியாமல் போனதால், வீடு பக்கத்திலேயே துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தேன். திடீரென கணவர் இறந்துவிட்டார். அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். அப்போது சூர்யா சார் தான் பணம் கொடுத்து உதவினார். மற்ற எந்த நடிகர்களுடம் எனக்கு உதவி செய்யவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Read More : வாகன ஓட்டிகளுக்கு செம குட் நியூஸ் வெளியாகப் போகுது..!! பெட்ரோல், டீசல் விலை குறையுதாம்..!! எவ்வளவு தெரியுமா..?

English Summary

I got an opportunity to act in the film Perazhagan and the role of Sneha in that film earned me good name.

Chella

Next Post

புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு சிக்கல்.. கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு..!! - தமிழக அரசு அதிரடி

Fri Sep 27 , 2024
A new problem is emerging for the residents of the outlying land. Similarly, there is a possibility that the residents who buy land without knowing that it is an alienated land may face problems.

You May Like