fbpx

’யோகி பாபுவுக்காக சிஎஸ்கே நிர்வாகத்திடம் நான் பேசுகிறேன்’..!! ஆனா ஒரு கண்டிஷன்..!! எம்.எஸ்.தோனியின் கலகல பேச்சு..!!

ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் லெட்ஸ் கெட் மேரீடு. ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ள இப்படத்தில் ஹரீஷுக்கு ஜோடியாக லவ் டுடே நாயகி இவானா நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, நடிகை நதியா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தோனியின் மனைவி சாக்‌ஷி தனது தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். தமிழில் அவர் தயாரித்துள்ள முதல் படம் இதுவாகும்.

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி கலந்துகொண்டு இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கருப்பு நிற கோர்ட் சூட் அணிந்து செம்ம ஸ்டைலிஷாக வந்திருந்த தோனி, தொகுப்பாளினி பாவனா கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலும் அளித்தார்.

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராயுடு ஓய்வு பெற்றுவிட்டதால் அவருக்கு பதிலாக யோகி பாபுவை அணியில் சேர்த்துக் கொள்வீர்களா என தோனியிடம் பாவனா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய தோனி, “யோகிபாபுவுக்கு கிரிக்கெட்டின் மீது ஆர்வம் இருக்கிறது என எனக்கு தெரியும். அவருக்காக சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் பேச நான் தயாராக இருக்கிறேன். ஆனா ஒரு கண்டிஷன், யோகிபாபு மேட்ச் விளையாடவும், பயிற்சிக்கும் சரியாக கால்ஷீட் கொடுக்க வேண்டும். அதற்கு அவர் சம்மதித்தால் நான் அணி நிர்வாகத்திடம் பேச தயார்” என பதிலளித்தார்.

முன்னதாக நடிகர் யோகிபாபுவுக்கு கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் இருப்பதை அறிந்த தோனி, அவருக்கு தன்னுடைய பேட் ஒன்றை கையெழுத்திட்டு அவருக்கு பரிசாக வழங்கி இருந்தார். தோனி கொடுத்த பரிசை எல்.ஜி.எம். படக்குழு அவரிடம் ஒப்படைத்தபோது இன்ப அதிர்ச்சி அடைந்த யோகிபாபு, அதுகுறித்த வீடியோவையும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோ செம்ம வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மக்களே குட் நியூஸ்..!! தீபாவளி பண்டிகை..!! ரயிலில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்..!!

Tue Jul 11 , 2023
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கப்பட உள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவையும் அதிகரிக்கும். சில சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்நிலையில்தான் […]

You May Like