fbpx

உங்களை இந்த விஷயத்தையா பேச சொன்னேன்..? நடிகர் சதீஷை வெளுத்து வாங்கிய தர்ஷா குப்தா..!!

ஆடை குறித்து தான் மேடையில் பேசியதை விளக்கி நடிகர் சதீஷ் வெளியிட்டிருந்த வீடியோவிற்கு, நடிகை தர்ஷா குப்தா காட்டமான பதில் ஒன்றை அளித்துள்ளார்.

‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், நடிகர் சதீஷ் தர்ஷா குப்தா அணிந்திருந்த ஆடை குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை பேசினார். அன்றிலிருந்து இந்த பஞ்சாயத்து தொடர்ந்து வருகிறது. காமெடி நடிகர் சதீஷ், ஜி.பி. முத்து, சின்னத்திரை நாயகி தர்ஷா குப்தா ஆகியோரின் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ஓ மை கோஸ்ட். இப்படத்தில் பாலிவுட் நடிகை சன்னி  லியோன் பேயாக நடிக்கிறார். படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீத்தில் நடந்தது.

உங்களை இந்த விஷயத்தையா பேச சொன்னேன்..? நடிகர் சதீஷை வெளுத்து வாங்கிய தர்ஷா குப்தா..!!

இதில், நடிகர் சதீஷ் பேசும் போது, “நடிகை சன்னிலியோன், மும்பையில் இருந்து வந்திருக்காங்க. அவங்க, நம்ப கலாச்சாரப்படி புடவை கட்டி வந்திருக்காங்க. ஆனால், நடிகை தர்ஷா குப்தா கோயம்பத்தூர்ல இருந்து வந்திருக்காங்க. அவங்களும் ஒரு ட்ரெஸ் போட்டு வந்திருக்காங்க” என்று கூறினார். இதையடுத்து, அவர் பேசிய இந்த வீடியோ வைரலானது. இவர் பேசிய பேச்சுக்கு, சின்மயி, பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். சிலரோ, “அவர் பேசியதில் என்ன தவறு?” என ஆதரவும் தெரிவித்தனர். 

உங்களை இந்த விஷயத்தையா பேச சொன்னேன்..? நடிகர் சதீஷை வெளுத்து வாங்கிய தர்ஷா குப்தா..!!

பலரது கடுப்பான கமெண்டுகளுக்குப் பிறகு, நடிகர் சதீஷ் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், “தர்ஷா குப்தா என்னிடம் ‘சன்னிலியோனைவிட நான் மார்டனாக உடை உடுத்தி வந்திருக்கிறேன், அவங்க எப்டி ட்ரெஸ் பன்னிட்டு வராங்கனு பாப்போம்’ என்று கூறினார். ஆனால், சன்னிலியோன் பட்டு புடவையில் வந்து விட்டார். இதைப் பார்த்தவுடன் தர்ஷா அப்செட் ஆகிட்டாங்க. இதைப் பற்றி ஸ்டேஜ்ல பேசும் போது சொல்லுங்க என்றும் தர்ஷா சொன்னார். இதைத்தான் நான் மேடையில் பேசவும் செய்தேன். அந்த வீடியோ தற்போது வைரலாகி, பலர் ‘சுதந்திரம் உடுத்துவது அவரவர் உரிமை’ என கூறி வருகின்றனர். கண்டிப்பாக அது உண்மைதான், ஆனால் நான் பேசியது, சும்மா நண்பர்களுடன் உரையாடியதை அப்படியே மேடையில் பேசிவிட்டேன். அது யாரையாவது புண்படுத்தியிருந்திருந்தால் மன்னித்து விடுங்கள்” என்று கூறியிருந்தார். இதையடுத்து, இந்த பிரச்சனைக்கு என்ட் கார்டு போடப்பட்டதாக அனைவரும் எண்ணினர். ஆனால், அங்கே செம ட்விஸ்ட் ஆக அமைந்தது தர்ஷா குப்தாவின் ட்வீட். 

சதீஷ் விளக்கமளித்த வீடியோவை அடுத்து, அவருக்கு கண்டனம் தெரிவித்தவர்கள், சற்று அமைதியாக இருக்க, தர்ஷா குப்தாவோ, “என்ன சதீஷ் இதெல்லாம்?” என்பது போல, ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “நான் மேடையில் உங்களை இந்த விஷயத்தையா கூற சொன்னேன்? யாராவது, என்னப்பத்தி மேடையில அசிங்கமா பேசுங்க-னு சொல்லுவாங்களா? அன்னைக்கு எனக்கும் அவ்ளோ ஹர்டிங்க ஆ இருந்துச்சு. இருந்தாலும் நான் அத பெருசா காட்டிக்கல. பட், நீங்க இப்டி பேசுவது நல்லதல்ல” என குறிப்பிட்டுள்ளார். சதீஷின் விளக்க வீடியோவையடுத்து சற்று ஓய்ந்து போன நெருப்பு இப்போது மறுபடியும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. நேற்று இரவு, தனக்கு ‘ஹர்ட்’ ஆகி விட்டதாக ட்வீட் செய்திருந்த தர்ஷா குப்தா, சிறிது நேரத்தில் அதனை டெலீட் செய்துள்ளார். இதனால், ரசிகர்கள், “என்னதான் யா நடக்குது இங்க..” என்று குழம்பி போய் உள்ளனர்.

Chella

Next Post

’அரசு ஊழியர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் பணிபுரிய வேண்டும்’..!! முதலமைச்சர் அதிரடி

Fri Nov 11 , 2022
ஏழை மக்களின் நலனை மனதில் கொண்டு அரசு ஊழியர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்கும் நோக்கத்தில் ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ் தலைமையில் 7-வது ஊதிய குழு அமைக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதற்காக, கர்நாடக அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பெங்களூருவில் நேற்று […]
’அரசு ஊழியர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் பணிபுரிய வேண்டும்’..!! முதலமைச்சர் அதிரடி

You May Like