fbpx

’நான் ஒன்றும் மார்பகங்களை வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை’..!! நெட்டிசனின் கேள்விக்கு செருப்படி பதில் கொடுத்த பிரியா..!!

செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். இவர், விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ள நிலையில், ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். அப்படம் வெற்றியடைந்ததை அடுத்து பிரியா பவானி சங்கருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.

நடிகை பிரியா பவானி சங்கருக்கு இந்த ஆண்டு பிசியான ஆண்டாகவே அமைந்துள்ளது. தற்போது 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த 6 மாதங்களில் மட்டும் அவர் நடிப்பில் மொத்தம் 5 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. இன்னும் அடுத்தடுத்த மாதங்களிலும் அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றாக வெளிவர இருக்கின்றன. தற்போது ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார் பிரியா. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர தெலுங்கிலும் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். மேலும் சென்னையில் சொந்தமாக உணவகம் ஒன்றை தொடங்கி அதையும் நிர்வகித்து வருகிறார். இப்படி பிசியாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அண்மையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

’நான் ஒன்றும் மார்பகங்களை வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை’..!! நெட்டிசனின் கேள்விக்கு செருப்படி பதில் கொடுத்த பிரியா..!!

நடிகைகள் இவ்வாறு கலந்துரையாடும் போது சிலர் அத்துமீறி கேள்வி கேட்டு அவர்களை கடுப்பாக்குவதுண்டு. அந்த வகையில் நெட்டிசன் ஒருவர், ‘உங்க உள்ளாடை சைஸ் என்ன?’ என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, என்னுடைய சைஸ் 34D. நான் ஒன்றும் மார்பகங்களை வேற்றுகிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் அவை இருக்கும். அவர்களின் டீ-ஷர்ட் வழியாக ஜூம் செய்துபார்த்தால் உங்களுக்கு அது தெரியும்” என செருப்படி பதில் கொடுத்துள்ளார்.

Chella

Next Post

‘‘மனிதர்களின் வேலைகளை பறிக்க மாட்டோம், மனிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம்’’ - ரோபோக்கள்

Mon Jul 10 , 2023
“ஆக்கப்பூர்வ செயல்களுக்கான செயற்கை நுண்ணறிவு” பற்றிய உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் கடந்த 6-ம்தேதி நடந்தது. இதில் பங்கேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் 9 மனித ரோபோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மனித ரோபோக்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நவீனமனித ரோபோக்கள் மூலம் உலகின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு ஜெனிவாவில் நடத்தப்பட்டது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை […]

You May Like