fbpx

’நான் உன்னுடைய ஆட்டத்தை பார்க்கவில்லை.. உன்னை தான் பார்த்தேன்’..!! இளைஞரை தன்னுடனே அழைத்துச் சென்ற ஓவியா..!!

தற்போதைய காலக்கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் பலரும், சின்னத்திரை பக்கம் வந்துவிடுகின்றனர். அப்படித்தான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இளம் நடிகை ஒருவரும் சின்னத்திரை பக்கம் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். ஆனால், அதில் அவர் செய்த சம்பவம் தான் இப்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதாவது கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் தான் ஓவியா. வெளிப்படையான பேச்சும், வெகுளித்தனமான குணமும் இவருக்கு தனி ஆர்மியை தொடங்கும் அளவுக்கு ரசிகர்களை தூண்டியது. பிக்பாஸை தொடர்ந்து சில படங்களில் நடித்த ஓவியா, சின்னத்திரை டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் அவர் நடனம் ஆடுபவர்களின் திறமையை பார்த்து மார்க் போடாமல் வழக்கம் போல தேவையில்லாததை பேசியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி அதில் கலந்து கொண்ட ஒரு இளைஞனை பார்த்து நான் உன்னுடைய ஆட்டத்தை பார்க்கவில்லை. உன்னை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். உன் சிக்ஸ் பேக் அழகை பார்த்து ரசித்தேன் என வெளிப்படையாகவே புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனென்றால், அந்த இளைஞன் ஓவியாவை விட 10 வயது குறைவானவர். தம்பி வயதில் இருக்கும் இளைஞனை பார்த்து இவர் இப்படி வெளிப்படையாக ஜொள்ளு விட்டது சில விமர்சனங்களுக்கும் ஆளானது.

அதன் பிறகு ஓவியா அந்த நிகழ்ச்சியை முழுதாக தொடராமல் பாதியிலேயே சென்று விட்டார். அவரைத்தான் காணோம் என்று பார்த்தால் அந்த இளைஞனையும் பார்க்க முடியவில்லையாம். அவரையும் ஓவியா அழைத்துக் கொண்டு சென்று விட்டாராம். இதனால் வெளியூரிலிருந்து வந்த பல போட்டியாளர்களை சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். எல்லாம் ஓவியாவின் ஆசையால் வந்த வினை.

Chella

Next Post

நீ என் அருகில் படுக்காதே….! நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பட்டியலின நபர், திருச்சி அருகே பயங்கரம்…..!

Tue Aug 8 , 2023
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நபரை கொடூரமாக கொலை செய்த, அவருடைய நண்பருக்கு, ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம். திருச்சி, உய்யக்கொண்டான் திருமலையை சேர்ந்தவர் கந்தசாமி (58). இவர், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் யாசகம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவருடன் இணைந்து, ஈரோடு மாவட்டம் காசிபாளையம், கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த முருகேசன் (40) என்ற நபரும் யாசகம் பெறுவது வழக்கம். இந்த நிலையில் தான், இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஆனால், […]

You May Like