சினிமாவில் பெண்கள் புகைப்பிடிப்பது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ள கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், வனிதா புகைபிடிப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை கிளப்பியிருந்தது. இந்நிலையில், வனிதா விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, ”ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி குடிப்பழக்கத்தை பற்றி பேசியிருந்தார்.
அனைவருமே குடிக்காதீர்கள், புகை பிடிக்காதீர்கள் என்று தான் சொல்வார்கள். ஆனால். சினிமா வேறு.. நிஜ வாழ்க்கை வேறு. நடிகர்கள் படங்களில் புகைப்பிடிப்பதை வரவேற்கிறீர்கள். அதுவே நடிகைகள் செய்தால் சர்ச்சையாக்குகிறீர்கள். இந்த விஷயத்தை ஒரு முன்னேற்றமாகவே நான் பார்க்கிறேன். காலம் மாறுகிறது. இதையும் வரவேற்க வேண்டும்.
இதனால் அவர்கள் நிஜத்திலும் அதை செய்வார்கள் என்று சொல்லிவிட முடியாது. அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். நான் புகைப்பிடிப்பது போல நடித்தது படத்தின் தேவை. அதற்காக நான் அப்படித்தான் என்று என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை சர்ச்சையாக்குவது தேவையில்லாதது” என்று தெரிவித்துள்ளார்.